உலகத்திலேயே "பெஸ்ட் டான்ஸ்" இதுதான்.. ஆடுடா ராஜா சந்தோஷமா!
கண்ணி வெடியில் காலை இழந்த சிறுவனின் நடனம் வைரலாகி வருகிறது.
Recommended Video
காபூல்: உலகத்திலேயே இதைத்தான் பெஸ்ட் டான்ஸ் என்று சொல்ல வேண்டும். எத்தனை சந்தோஷம், எத்தனை வலி, எத்தனை ஏக்கம் இருந்தால் இந்த சிறுவன் இப்படி உற்சாகமாக ஆடுவான்.
ஏழைகளை ஏழைகளாகவே ஆட்சியாளர்கள் வைத்துள்ளார்கள்... கமல்ஹாசன் விளாசல்
இவனது பெயர் தெரியவில்லை. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த குட்டிப் பையன். ஆப்கானிஸ்தானின் நிலையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கால் வைக்க முடியாது, கை வைக்க முடியாது. எங்கெங்கும் அபாயகரமான கண்ணி வெடிகள்தான். அப்படிப்பட்ட ஒரு கண்ணி வெடியில் சிக்கி தனது காலை இழந்தவன் இந்த சிறுவன்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் முகாம் மற்றும் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று வந்தான். அங்கு அவனுக்கு தற்போது செயற்கைக் கால் பொருத்தியுள்ளனர். கால் பொருத்தியவுடன் வந்தது பாருங்க ஒரு உற்சாகம், சுற்றிலும் உள்ளவர்களைப் பொருட்படுத்தாமல் போட்ட ஆட்டம்தான் இந்த டான்ஸ்.
Cute and happy #Afghan boy dances at the @ICRC_af orthopaedics center after he got a prosthetic leg. He was a victim of a landmine.
— Sharif Hassan (@MSharif1990) May 6, 2019
via @roya_musawi pic.twitter.com/G1eRd9ZmFf
எத்தனை அழகாக இருக்கிறது பாருங்க இந்த டான்ஸ். உலகம் பெரியது, அழகியது.. அதில் சுற்றிச் சுழன்று ஆடிப் பாட வேண்டிய இதுபோன்ற லட்சக்கணக்கான சுதந்திரப் பறவைகளை முடக்கிப் போடும் கொடூரர்களுக்கு முகத்தில் கொடுத்த அடி போல வந்துள்ளது இந்த செயற்கைக் கால். இதைப் பொருத்தியவர்களுக்கு கோடி நன்றிகள் சொல்ல வேண்டும்.