For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொலம்பியாவில் பயங்கர வெள்ளம், நிலச்சரிவு- 93 பேர் பலி; மீட்பு பணிகள் மும்முரம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

மக்காவ்: கொலம்பியா நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 93 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், பலர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவில் உள்ள புட்டுமயோ மாகாணத்தில் பல மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

 Landslides in Colombia kill at least 93

இதனால், நதிகளின் கரையோரம் உள்ள பொதுமக்களின் வீடுகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 93 பொதுமக்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். பலரை காணவில்லை.

மேலும், பல பேர் மண் சரிவில் சிக்கி புதையுண்டு போயுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சம்பவ இடத்தில் தொடந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. மீட்புப் பணிகளை பார்வையிட்ட அந்நாட்டு பிரதமர் ஜூவன் மானுவல் சாண்டோஸ், பேரிடர் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

English summary
heavy rains caused rivers in Colombia to burst their banks and flood homes with mud in Putumayo province of Colombia on Saturday. Landslides have killed at least 93 people and many more have been left injured.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X