For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரும் சத்தம்.. 6 கிமீ உயரத்திற்கு பரவிய கரும் புகை.. இந்தோனேசியாவில் வெடித்தது ராட்சச எரிமலை.. ஷாக்

இந்தோனேசியாவில் இருக்கும் எரிமலை ஒன்று திடீர் என்று வெடித்தது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

ஜகர்த்தா: இந்தோனேசியாவில் இருக்கும் எரிமலை ஒன்று திடீர் என்று வெடித்தது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    Indonesia-வில் பெரும் சத்ததுடன் வெடித்த எரிமலை... என்ன நடக்கிறது?

    உலகில் அதிகமாக எரிமலை இருக்கும் தீவுகளில் இந்தோனேசியாவும் ஒன்று. அங்கு அடிக்கடி எரிமலை வெடிப்புகள் ஏற்படும். அங்கு எரிமலை வெடிப்புகளுக்கு மக்கள் பழகிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஆனால் சில சமயங்களில் அங்கே பெரிய அளவில் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஏற்படும். அதோடு மக்கள் அங்கிருந்து அவ்வப்போது கூட்டம் கூட்டமாக வெளியேறும் சம்பவங்களும் கூட அவ்வப்போது நடக்கும்.

    குழந்தைகள் கையில் கோழிக்குஞ்சு.. செல்போன் தலைவலிக்கு புதிய தீர்வு கண்டுபிடித்த இந்தோனேசியா!குழந்தைகள் கையில் கோழிக்குஞ்சு.. செல்போன் தலைவலிக்கு புதிய தீர்வு கண்டுபிடித்த இந்தோனேசியா!

    எரிமலை வெடித்து

    எரிமலை வெடித்து

    இந்த நிலையில் இந்தோனேசியாவில் இருக்கும் பெரிய எரிமலை ஒன்று அனுஜ் வெடித்துள்ளது. மவுண்ட் மெரபி என்று அழைக்கப்படும் இந்த உரிமையை வெடித்துள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் இந்த எரிமலை உள்ளது. அங்கு இருக்கும் எரிமலைகளில் இது மிகவும் பெரிய எரிமலை என்று கூறுகிறார்கள்.

    அதிக சக்தி

    அதிக சக்தி

    அதேபோல் இது மிகவும் சக்தி வாய்ந்த எரிமலை என்றும் கூறப்படுகிறது. இந்த எரிமலை கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்தது. ஆனாலும் கூட இந்த எரிமலைக்கு எதிராக 3ம் எண் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த எரிமலை மொத்தமாக 2968 மீட்டர் உயரம் கொண்டது. இந்தோனேசியாவில் இருக்கும் 500 பெரிய ஏவுகணைகளில் இது அதிகம் சக்தி வாய்ந்தது என்கிறார்கள்.

    கடைசியாக எப்போது

    கடைசியாக எப்போது

    கடைசியாக இந்த எரிமலை லேசான வெடிப்பை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஏற்படுத்தியது. அதன்பின் அமைதியாக மாறியது. அதற்கு முன் 2010ல் இந்த எரிமலை பெரிய வெடிப்பையே ஏற்படுத்தியது. இதனால் அங்கு இருந்த 353 மக்கள் பலியானார்கள். இந்த நிலையில் தற்போது மீண்டும் எரிமலை வெடித்து இருக்கிறது.

    மீண்டும் வெடித்தது

    மீண்டும் வெடித்தது

    இன்று அதிகாலை அங்கு மிகப்பெரிய சத்தம் கேட்டது. இதையடுத்து அந்த எரிமலை பெரிய சத்தத்துடன் வெடித்தது. இதனால் அங்கு 6 கிமீ உயரத்திற்கு மோசமான புகை காற்று பரவியது. அருகே இருக்கும் ஊர்களில் அதிகாமாக காற்று பரவியது. அங்கு ஜாவாவில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

    என்ன எச்சரிக்கை

    என்ன எச்சரிக்கை

    இதனால் அங்கு இருக்கும் மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது. புகை ஊருக்குள் வரும். இனிதான் ஆபத்து இருக்கிறது. மக்கள் இதனால் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அங்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

    English summary
    Large Mount Merapi volcano erupts in Indonesia all of a sudden.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X