For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தல்: வெளியானது கடைசி கட்ட சர்வே.. யாருக்கு சாதகம் தெரியுமா? #ElectionDay

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான இறுதி கட்ட கருத்துக் கணிப்புகளில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை பெற்றுள்ளார்.

அதிபர் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று தொடர்ந்து கருத்து கணிப்பு வந்தபடியே உள்ளன. ஆரம்பத்தில் இருந்தே ஹிலாரி கிளிண்டன் இதில் முன்னணியில் இருந்தார். ஆனால் இடையில் அவர் மீது இ-மெயில் பிரச்சினை கிளப்பப்பட்டது. இதனால் அவருக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது.

Last polls to come in show Hillary Clinton with a resolute lead

இந்நிலையில் தற்போது இறுதி கட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. கருத்துக் கணிப்புகளில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். வாக்களிப்பு இன்று நடைபெற்று வரும் நிலையில், இறுதிகட்ட கருத்துக் கணிப்புகளை முன்னணி மீடியாக்கள் வெளியிட்டுள்ளன.

மோன்மவுத் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் ஹிலாரி 6 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளளார். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கணிப்புபடி டிரம்பை விட 8 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளார் ஹிலாரி. ஃபாக்ஸ் செய்தியை பொறுத்தளவில் இந்த வித்தியாச முன்னணி 4 புள்ளிகளாக உள்ளது.

சிறு வேறுபாடுகள் இருப்பினும் முன்னணி ஊடகங்கள் கணிப்பு என்னவோ, ஹிலாரிக்கு ஆதரவாகவே உள்ளது.

English summary
As the election comes to a close, the last polls to come in show Democratic nominee Hillary Clinton with a resolute lead across the board.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X