For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லெபனான் பயங்கரம்.. இது விபத்து இல்லை.. மோசமான வெடிகுண்டு தாக்குதல்.. அடித்து சொல்லும் டிரம்ப்!

லெபனான் கிடங்கு வெடிப்பு, விபத்தாக இருக்க வாய்ப்பு இல்லை, இது பெரும்பாலும் வெடிகுண்டு தாக்குதலாக இருக்க வாய்ப்புள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அடித்து கூறுகிறார்.

Google Oneindia Tamil News

பெய்ரூட்: லெபனான் கிடங்கு வெடிப்பு, விபத்தாக இருக்க வாய்ப்பு இல்லை, இது பெரும்பாலும் வெடிகுண்டு தாக்குதலாக இருக்க வாய்ப்புள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அடித்து கூறுகிறார்.

Recommended Video

    கோரமான Lebanon வெடிவிபத்தும் பீதியை கிளப்பும் காரணங்களும் | Oneindia Tamil

    லெபனான் கிடங்கு வெடிப்பு குறித்து இன்னும் முழுமையான தகவல்களை அந்த நாட்டு அரசு வெளியிடவில்லை. பெய்ரூட் கெமிக்கல் கிடங்கில் வெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடிப்பு காரணமாக 75 பேர் இதுவரை பலியாகி உள்ளனர், என்று மட்டும்தான் அரசு அதிகாரபூர்வமாக அறிவுப்புகளை வெளியிட்டுள்ளது.

    ஆனால் இன்னும் இந்த வெடிப்பிற்கு என்ன காரணம், எதனால் இந்த வெடிப்பு ஏற்பட்டது என்று அரசு வெளியிடவில்லை. இது உண்மையில் விபத்து தானா அல்லது வேறு ஏதாவது தாக்குதலா என்று கேள்விகள், சந்தேகங்கள் எழுந்துள்ளது.

    லெபனான் குண்டு வெடிப்பு பயங்கரத்திற்கு நாங்கள் காரணமல்ல.. இஸ்ரேல் திட்டவட்டமாக மறுப்பு லெபனான் குண்டு வெடிப்பு பயங்கரத்திற்கு நாங்கள் காரணமல்ல.. இஸ்ரேல் திட்டவட்டமாக மறுப்பு

    என்ன சந்தேகம்

    என்ன சந்தேகம்

    சிரியாவில் இருக்கும் ஷியா பிரிவை சேர்ந்த புரட்சி அமைப்புகள், ஆயுத குழுக்கள் இந்த தாக்குதலை நிகழ்த்தி இருக்கலாமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. சன்னி - ஷியா மோதல் காரணமாக, சன்னி நாடான லெபனான் மீது சிரியா அல்லது ஈரான் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதேபோல் இன்னொரு பக்கம் இஸ்ரேல் கூட இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் இதை இஸ்ரேல் முன்பே மறுத்துவிட்டது.

    இன்று தாக்குதல்

    இன்று தாக்குதல்

    இந்த நிலையில் லெபனான் அரசே இதற்கு என்ன காரணம் என்று முழுமையாக அறிவிக்காத நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இதை தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகம் கொள்கிறார். இன்று அதிகாலை பேட்டி அளித்த டிரம்ப், இந்த லெபனான் வெடிப்பு தாக்குதலாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இது விபத்து கிடையாது என்று குறிப்பிட்டு இருந்தார்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இது தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், எப்படி உங்களால் உறுதியாக இப்படி கூற முடிகிறது. லெபனான் அரசு கூட இதை தாக்குதல் என்று கூறவில்லையே என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த டிரம்ப், எனக்கு இதை பார்த்தால் தாக்குதல் போலத்தான் தெரிகிறது. இது ஒரு மோசமான தாக்குதல். விபத்து கிடையாது. குண்டு மூலம் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இருக்கலாம்.

    இதுதான் பின்னணி

    இதுதான் பின்னணி

    அந்த வெடிப்பை, அதன் வகையை பார்த்தால் தாக்குதல் போலவே இருக்கிறது. அமெரிக்க ராணுவத்தில் இருக்கும் ஜெனரல்கள் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களும் இதே சந்தேகத்தை எழுப்பி உள்ளனர்.. இது கிடங்கில் ஏற்பட்ட விபத்து கிடையாது. அங்கு யாரோ தாக்குதல் நடத்தி உள்ளனர். பெரும்பாலும் இது வெடிகுண்டாக, கெமிக்கல் குண்டாக இருக்க வாய்ப்புள்ளது , என்று டிரம்ப் குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    Lebanon Beirut Blast is a terrible attack, not an accident says Trump in his first account on the disaster.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X