For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

28 நொடி இடைவெளி.. 2 வெடிப்புகள்.. 200 கிமீ தூரத்திற்கு பரவிய விஷவாயு.. லெபனானில் நீடிக்கும் மர்மம்!

பெய்ரூட்: லெபனானில் நேற்று கிடங்கு ஒன்றில் அடுத்தடுத்து இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

பெய்ரூட்: லெபனானில் நேற்று கிடங்கு ஒன்றில் அடுத்தடுத்து இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    வெடித்துச் சிதறிய 2750 டன் Ammonium Nitrate, 200 KM-க்கு அப்பால் சத்தம் | Oneindia Tamil

    லெபனான் நாட்டில் இருக்கும் பெய்ரூட் துறைமுகத்திற்கு அருகே நேற்று பெரிய கிடங்கு வெடிப்பு ஏற்பட்டது. இந்திய நேரப்படி நேற்று இரவு 10.30 மணிக்கு அடுத்தடுத்து இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டது. இதில் 100 பேர் பலியாகி உள்ளனர்.

    மொத்தம் 4000 பேர் இதில் படுகாயம் அடைந்துள்ளனர். அங்கு சுமார் 20 கிமீ பகுதியில் இருந்த அனைத்து கட்டிடங்களும் இந்த வெடிப்பு காரணமாக தரைமட்டமாகி உள்ளது. வானுயர கட்டிடங்கள், துறைமுகங்கள் என்று எல்லாம் மொத்தமாக தரைமட்டமாகி உள்ளது.

    முதல் வெடிப்பு எப்படி

    முதல் வெடிப்பு எப்படி

    அங்கு முதல் வெடிப்பு, அந்த குறிப்பிட்ட கெமிக்கல் கிடங்கில் 10.30 மணி அளவில் இந்திய நேரப்படி நேற்று இரவு ஏற்பட்டது. விமானம் ஒன்று தாழ்வாக பறந்தால் எப்படி சத்தம் கேட்குமோ அப்படித்தான் சத்தம் கேட்டது என்று அங்கு சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் குறிப்பிட்டு உள்ளனர். ஆனால் போக போக புகை வந்ததும்தான் மக்கள் வெளியே சென்று கிடங்கு வெடிப்பை பார்த்து உள்ளனர். அதை தங்கள் வீடியோவில் பதிவு செய்து உள்ளனர்.

    வீடியோ பதிவு

    வீடியோ பதிவு

    இந்த வீடியோ பதிவு செய்து கொண்டு இருந்த போதே அடுத்த வெடிப்பு ஏற்பட்டது. முதல் விபத்தின் புகை சிவப்பு நிறத்தில் வந்த போதே அடுத்த விபத்து ஏற்பட போகிறது என்று பலரும் கணித்து இருந்தனர். அதேபோல் முதல் வெடிப்பில் இருந்து சரியாக 28 நொடிகளுக்கு பிறகு இரண்டாவது வெடிப்பு ஏற்பட்டது. இந்த இரண்டாவது வெடிப்புதான் மோசமானதாக இருந்தது. இதுதான் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

    இடைவெளி

    இடைவெளி

    முதல் வெடிப்பு முடிந்து உள்ளே தீ பற்றிக்கொண்டு இருந்தது. இந்த தீ காரணமாக இரண்டாவது வெடிப்பு ஏற்பட்டதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். இரண்டாவது வெடிப்பிற்கு அங்கு இருந்த அம்மோனியா நைட்ரேட் வெடித்ததுதான் காரணம் என்று கூறுகிறார்கள். இந்த வெடிப்பு காரணமாக 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டிடங்களை இடிந்துள்ளது. நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

    200 கிமீ

    200 கிமீ

    அதேபோல் இந்த வெடிப்பு காரணமாக நைட்ரஜன் ஆக்சைட் மற்றும் அம்மோனியா விஷ வாயுக்கள் வெளியாகி உள்ளது. இந்த வாயுக்கள் மொத்தம் 200 கிமீ தூரம் வரை பரவி இருக்கிறது. சிரியாவில் கூட இந்த வாயுக்கள் பரவி உள்ளது. அதேபோல் இஸ்ரேலுக்கும் இந்த வாயுக்கள் சென்றுள்ளது. ஆனால் இதனால் மக்கள் யாராவது மரணம் அடைந்தனரா என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

    பெரிய பள்ளம்

    பெரிய பள்ளம்

    அதேபோல் இந்த விபத்து ஏற்பட்ட இடத்தில 25 அடிக்கு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாதாரண விபத்து ஏற்பட்டால் இப்படி பள்ளம் ஏற்படாது. அதையும் மீறி இவ்வளவு பெரிய பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது என்றால் அதற்கு பின் வேறு ஏதாவது காரணம் இருக்கலாம் என்று கூறுகிறார்கள். 100 கிமீ தூரத்திற்கு அதிகமாக இதனால் ஷாக் வேவ்ஸ் எனப்படும் அதிர்ச்சி அலைகள் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    என்ன மர்மம்

    என்ன மர்மம்

    இதில் இன்னும் நீடிக்கும் மர்மம் என்றால், அது விபத்துக்கான காரணம்தான். அம்மோனியா நைட்ரேட் வெடித்துள்ளது. ஆனால் அது எப்படி வெடித்தது என்பதுதான் தெரியவில்லை. அங்கு சென்று முதல் கட்ட ஆராய்ச்சி நடத்த வல்லுனர்கள் குழுவும் ''எப்படி விபத்து நடந்தது, என்று தெரியாது'' என்று கையை விரித்துவிட்டது. இதனால் இந்த வெடிப்பிற்கான உண்மையான காரணம் இன்னும் மர்மமாகவே இருக்கிறது.

    English summary
    Lebanon Beirut Blast: The 28 seconds gap and the unanswered questions of the disaster yesterday
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X