For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹிரோஷிமா.. நாகசாகி.. பெய்ரூட்.. வெடித்து சிதறிய 2750 டன் "அம்மோனியம் நைட்ரேட்".. லெபனான் கொடூரம்!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருக்கும் கிடங்கில் 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருக்கும் கிடங்கில் 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அம்மோனியம் நைட்ரேட் அது மோசமான பக்க விளைவுகளை, நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    Lebanon தலைநகர் Beirut-ல் திடீர் குண்டுவெடிப்பு

    லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உலகத்தையே உலுக்கிய வெடி விபத்து நேற்று ஏற்பட்டது. இது விபத்தாகவும் இருக்கலாம், அதே சமயம் திட்டமிட்ட தாக்குதலாகவும் இருக்கலாம் என்று லெபனான் அரசு சந்தேகிக்கிறது.

    நேற்று இரவு சரியாக இந்திய நேரப்படி 10.30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த வெடிப்பில் தற்போது வரை 75 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் 4000 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    பாட்டிக்கு வயசு 75 .. ஏற்கனவே ஞாபக மறதி நோயால் அவதி.. அவரை போய் பலாத்காரம் செய்த காமுகன்! பாட்டிக்கு வயசு 75 .. ஏற்கனவே ஞாபக மறதி நோயால் அவதி.. அவரை போய் பலாத்காரம் செய்த காமுகன்!

    பெய்ரூட் மோசம்

    பெய்ரூட் மோசம்

    மொத்தமாக பெய்ரூட் பகுதியில் 200 கட்டிடங்கள் இதனால் தரைமட்டமாகி உள்ளது. மொத்தமாக பெய்ரூட் நகரத்தை இந்த வெடிப்பு சிதைத்து சின்னாபின்னமாக்கி உள்ளது. அதிலும் கடல் எல்லையில் இருந்த பெய்ரூட் துறைமுகம் மொத்தமாக நொறுங்கி உள்ளது. சன்னி - ஷியா மோதல் காரணமாக பெரும் போருக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து நின்ற பெய்ரூட் தற்போது மீண்டும் போர் பூமியாக மாறும் நிலைக்கு சென்றுள்ளது.

    அம்மோனியா

    அம்மோனியா

    லெபனான் பெய்ரூட் கிடங்கில் 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததுதான் இந்த வெடிப்பிற்கு காரணம் என்று கூறுகிறார்கள். அந்த கிடங்கில் முதலில் ஒரு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணம் தெரியவில்லை. அதை தொடர்ந்து இன்னொரு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டாவது வெடிப்பில் தான் அம்மோனியம் நைட்ரேட் வெடித்துள்ளது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

    மிக மோசம்

    மிக மோசம்

    அதிலும் 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்துள்ளது. இதை கொஞ்சம் கூட பராமரிப்பு இன்றி அந்த கிடங்கில் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. 5 வருடமாக இதை பராமரிக்காமல் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதுதான் அம்மோனியம் நைட்ரேட் சிதைந்து, அதுவே வெடித்ததற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். இந்த அம்மோனியம் நைட்ரேட் மோசமான பக்க விளைவுகளை, நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏன் மோசம்

    ஏன் மோசம்

    அம்மோனியம் நைட்ரேட் என்பது பொதுவாக வெடி பொருட்கள் அல்லது விவசாய உரம் தயாரிக்க பயன்படுத்தப்படும். எதற்காக அங்கு இவ்வளவு அம்மோனியம் நைட்ரேட் வைத்து இருந்தனர் என்று கேள்வி எழுந்துள்ளது. அம்மோனியம் நைட்ரேட் தீயில் பட்டால் உடனே வெடிக்கும். இது வெடிக்கும் பட்சத்தில் அது மோசமான நச்சு வாயுவை வெளிப்படுத்தும். அதிலும் நைட்ரஜன் ஆக்சைட், அம்மோனியா கேஸ் என்ற மிக மோசமான வாயுவை இது வெளியே விடும் .

    சிறிய பைப்

    சிறிய பைப்

    சிறிய பைப் இருந்தால் கூட, அம்மோனியம் நைட்ரேட்அதில் உள்ளே சென்று மொத்தமாக செட்டில் ஆகி, வெடிப்பிற்கு காரணமாக மாறும். இந்த அம்மோனியம் நைட்ரேட்டை மிக மிக கவனமாக கையாள வேண்டும். இந்த அம்மோனியம் நைட்ரேட்தான் தற்போது அங்கு வெடித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சிவப்பு புகை லெபனான் நாட்டில் பல மாநிலங்களுக்கு, நகரங்களுக்கு பரவி இருக்கிறது.

    என்ன சொல்கிறார்கள்

    என்ன சொல்கிறார்கள்

    ஹிரோஷிமா, நாகசாகி போல இதுவும் மோசமான சம்பவம் என்று அந்நாட்டு அரசு இதை வர்ணித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட விஷவாயு பரவல் காரணமாக இன்னும் பலர் பலியாக வாய்ப்புள்ளது என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. பெய்ரூட் வெடிப்பு குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்றும், அம்மோனியம் நைட்ரேட் வைத்து இருந்தது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் லெபனான் பிரதமர் ஹாசன் டியாப் தெரிவித்துள்ளார்.

    English summary
    Lebanon Beirut Blast: The toxic gas from the Ammonium Nitrate may increase the death toll in the city and port area.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X