For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முன்பு vs இப்போது.. வெளியான பெய்ரூட் புகைப்படங்கள்! வெடி விபத்தால் ஒரு நகரமே இப்படி மாறிப்போகுமா OMG

Google Oneindia Tamil News

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தையடுத்து, அந்த நகரம் எப்படி மாறிப்போயுள்ளது என்பது தொடர்பான படங்கள் வெளியாகியுள்ளன.

Recommended Video

    கோபத்தில் LEBANON மக்கள் ! வெடிக்க காத்திருக்கும் BEIRUT

    லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று முன்தினம் நடந்த பயங்கர வெடி விபத்து மொத்த நாட்டையும் நிலைகுலையச் செய்துள்ளது.

    துறைமுகத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அது துறைமுகத்தில் இருந்த கிடங்கில் வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருளுக்கும் பரவியுள்ளது.

    லெபனான் போல் சென்னை துறைமுகத்தில் 6 ஆண்டாக பாதுகாக்கப்பட்டு வரும் 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட்லெபனான் போல் சென்னை துறைமுகத்தில் 6 ஆண்டாக பாதுகாக்கப்பட்டு வரும் 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட்

    முன்பும், பின்பும்

    முன்பும், பின்பும்

    இந்த நிலையில், விபத்துக்கு முன்பும், பிறகும் பெய்ரூட் துறைமுகம் மற்றும் நகரம் எப்படி இருந்தன என்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. செயற்கைக்கோள் படங்கள் உள்ளிட்ட பல்வேறு சோர்ஸ் மூலம் கிடைக்கப்பட்ட படங்கள் இதுவாகும். அதில் நகரின் நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    சிதைந்தது

    சிதைந்தது

    பயங்கர சத்தத்துடன் வேதிப்பொருள் வெடித்து சிதறியது. இந்த வெடிப்பு ஒட்டுமொத்த பெய்ரூட்டையும் உலுக்கியது. துறைமுகத்தை சுற்றி இருந்த நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. துறைமுகத்தில் இருந்து ஒரு மைல் தூரத்துக்கு நகரின் அனைத்து இடங்களும் முற்றிலுமாக சிதைந்து போனது.

    லெபனான் அரசு கவலை

    லெபனான் அரசு கவலை

    வெடிப்பு நடந்த இடத்தில் இருந்த சடலங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதாலும், இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருப்பதாலும், கணிக்க முடியாத அளவுக்கு, பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்று லெபனான் அரசு கவலை தெரிவித்துள்ளது.

    அமோனியம் நைட்ரேட்

    அமோனியம் நைட்ரேட்

    பெய்ரூட் துறைமுக கிடங்கில் கடந்த 6 ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருள் வெடித்ததால் இந்தக் கோர விபத்து நடந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததால் இந்த விபத்து நடைபெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.

    இஸ்ரேல் உதவி

    இஸ்ரேல் உதவி

    உலக தலைவர்கள் அனைவரும் லெபனான் வெடி விபத்துக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். ரஷியா உள்ளிட்ட பல நாடுகள் லெபனானுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளன. லெபனானில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இஸ்ரேலில் பல்வேறு இடங்கள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, லெபனானுக்கு தேவையான உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

    பெய்ரூட் நகரம்

    பெய்ரூட் நகரம்

    பெய்ரூட் நகரில் இரண்டு வாரங்களுக்கு அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. 3 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பெய்ரூட் துறைமுகமே குப்பை குவியல் போல கிடக்கிறது. நகரமும் சிதிலமடைந்து கிடக்கிறது. அமோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறும் காட்சிகள் பல்வேறு கோணங்களில் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

    English summary
    Lebanon blast news: Before And After Image Shows The Impact Of Explosion In Beirut
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X