For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லெபனானில் அணு ஆயுதங்கள் வெடித்து சிதறியதைப் போல் வெடி விபத்து.. பக்கத்து நாட்டிலும் நில அதிர்வு!

Google Oneindia Tamil News

பெய்ரூட்: லெபனான் நாட்டு தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் பழைய வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணியளவில் பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அணு ஆயுதங்கள் வெடித்து சிதறியதைப்போல் பயங்கரமான சத்தமும் நிலஅதிர்வும் பெய்ரூட்டில் இந்த குண்டுவெடிப்பு ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    Lebanon தலைநகர் Beirut-ல் திடீர் குண்டுவெடிப்பு

    லெபனான் பொதுப் பாதுகாப்புத் தலைவர் ஜெனரல் அப்பாஸ் இப்ராஹிம் குண்டு வெடிப்பு நடந்த பெய்ரூட் துறைமுகத்ததை பார்வையிட்டார்,

    அப்போது அவர் கூறுகையில், வெடிகுண்டுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெடித்து சிதறிய வெடி பொருள்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்டது.

    லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பூமியை பிளக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு.. ஷாக் வீடியோலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பூமியை பிளக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு.. ஷாக் வீடியோ

    உயிரிழந்தவர்கள்

    உயிரிழந்தவர்கள்

    நாங்கள் பெய்ரூட்டின் துறைமுகத்தின் நுழைவாயிலில் இருக்கிறோம். இப்போது ஏற்பட்டுள்ள அசம்பாவிதத்தை நீங்கள் என் பின்னால் காணலாம். ஆம்புலன்ஸ்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன, தொடர்ந்து உயிரிழந்தவர்களை ஏற்றி கொண்டு வெளியேற்றுகின்றன.

    கக்கிய தீப்பிழம்பு

    கக்கிய தீப்பிழம்பு

    பாதுகாப்பு வட்டாரங்களின்படி, குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அந்த எண்ணிக்கை உயரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், ஏனெனில் சுகாதார அமைச்சர் மற்றும் லெபனான் செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் கூற்றின்படி நூற்றுக்கணக்கானோர் காயங்கள் அடைந்துள்ளார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மீட்பு முயற்சியில் உதவ நாடு முழுவதும் இருந்து ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இது ஒரு பெரிய குண்டு வெடிப்பு; சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வண்டிகள் தீப்பிழம்பை வெளியேற்ற முயற்சிப்பதை நீங்கள் காணலாம்." என்றார்.

    பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்

    பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்

    இந்த விபத்து காரணமாக லெபனானில் இன்று (ஆகஸ்ட 5) தேசிய துக்கதினமாக அனுசரிக்கப்படுகிறது. மேலும், இந்த விபத்து குறித்து அந்நாட்டு அதிபர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை உடனடியாக கூட்டி ஆலோசிக்கிறார். மேலும், இந்த விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.

    பக்கதது நாட்டில் உணரப்பட்டது

    பக்கதது நாட்டில் உணரப்பட்டது

    அணு ஆயுதங்கள் வெடித்து சிதறியதைப்போல் பயங்கரமான சத்தமும் நிலஅதிர்வும் லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இந்த குண்டுவெடிப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த வெடிவிபத்தால் ஏற்பட்ட நில அதிர்வு 234 கி.மீ. தொலைவில் உள்ள சைப்ரஸ் நாட்டில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    English summary
    The Lebanese head of General Security, General Abbas Ibrahim, visited the site of the explosion and said it appears the explosion was caused by highly explosive material that was stored in a warehouse.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X