For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெடிவிபத்தால் வெடித்த மக்கள் புரட்சி- கூண்டோடு பதவி விலகியது லெபனான் பிரதமர் ஹாசன் தலைமையிலான அரசு

Google Oneindia Tamil News

பெய்ரூட்: உலகை உலுக்கிய பெய்ரூட் வெடிவிபத்து சம்பவத்தைத் தொடர்ந்து மக்கள் புரட்சியில் இறங்கியதால் லெபனானில் பிரதமர் ஹாசன் தலைமையிலான அரசு பதவி விலகுவதாக அறிவித்தது.

Recommended Video

    லெபனான் மக்கள் புரட்சியும், பிரதமர் ராஜினாமாவும்.. என்ன நடந்தது?

    லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உலகை அதிரவைத்த மிகப் பெரிய வெடிவிபத்து நிகழ்ந்தது. இந்த பயங்கர வெடிவிபத்தில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர். 6,000க்கும் அதிமமானோர் படுகாயமடைந்தனர்.

    Lebanon Govt resigns over Beirut blast

    இதில் ஒட்டுமொத்தமாக பெய்ரூட் நகரமே உருக்குலைந்தே போனது. 2,700 டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்ததே இந்த மோசமான வெடிவிபத்துக்கு காரணம் என அரசு அறிவித்தது.

    இந்த வெடிவிபத்தால் உறவுகளையும் உடைமைகளையும் பறிகொடுத்த மக்கள், அரசின் மோசமான நிர்வாகத்துக்கு எதிராக வீதிகளில் இறங்கினர். மக்களின் இந்த தன்னெழுச்சிப் போராட்டங்கள் புரட்சியாகவே வெடித்தது.

    பெய்ரூட்.. கணித்தபடி நடந்தது.. லெபனானில் வெடித்த புரட்சி.. வீதிக்கு வந்த மக்கள்.. போராட்டம்பெய்ரூட்.. கணித்தபடி நடந்தது.. லெபனானில் வெடித்த புரட்சி.. வீதிக்கு வந்த மக்கள்.. போராட்டம்

    இதன் உச்சகட்டமாக இன்று அந்நாட்டு பிரதமர் ஹாசன் தியாப், தமது அரசு பதவி விலகுவதாக அறிவித்தார். லெபனான் தேசிய தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஹாசன் தியாப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

    English summary
    Lebanon Govt has resigned over the explosion last week in Beirut killed at least 200 people and wounded about 6,000.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X