For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லெபனான் பயங்கர வெடிவிபத்து.. இந்தியர்களுக்கு அவசர உதவி மையம் அமைத்தது இந்திய தூதரகம்

Google Oneindia Tamil News

பெய்ரூட்: லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக பகுதியில் பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்ட நிலையில், இந்தியர்களுக்கு உதவ அவசர உதவி மையத்தை லெபனான் இந்திய தூதரகம் அமைத்துள்ளது.

Recommended Video

    Lebanon தலைநகர் Beirut-ல் திடீர் குண்டுவெடிப்பு

    இந்திய நேரப்படி நேற்று இரவு 9.30 மணியளவில் பெய்ரூட்டில் உள்ள துறைமுக பகுதியில் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

    பழைய வெடிபொருட்கள் குடோனில் வெடிகள் வெடித்து சிதறியது. இந்த பயங்கர வெடி விபத்தால் ஏற்பட்ட நில அதிர்வை பெய்ரூட் மட்டுமல்லாமல் அந்நகருக்கு அருகில் உள்ள தீவுகளிலும், பக்கத்து நாட்டில் உள்ள பகுதியிலும் உணரப்பட்டது.

    லெபனான் குண்டு வெடிப்பு பயங்கரத்திற்கு நாங்கள் காரணமல்ல.. இஸ்ரேல் திட்டவட்டமாக மறுப்புலெபனான் குண்டு வெடிப்பு பயங்கரத்திற்கு நாங்கள் காரணமல்ல.. இஸ்ரேல் திட்டவட்டமாக மறுப்பு

    வீடுகள் நொறுங்கின

    வீடுகள் நொறுங்கின

    இந்த வெடிவிபத்தில் துறைமுகமே உருகுலைந்து போனது, அருகில் இருந்த. வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. . சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் தீயில் கருகின.. பல கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள வீடுகளின் கண்ணாடிகள் நெறுங்கின. பெய்ரூட் நகரில் பல வீடுகளில் பால்கனிகள் இடித்து விழுந்தன. மொத்த பெய்ரூட் நகரமும் புகைமூட்டமாக காணப்படுகிறது.

    100 பேர் படுகாயம்

    100 பேர் படுகாயம்

    இந்த கோரவெடிவிபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ள நிலையில் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    உதவி மையம்

    உதவி மையம்

    இந்நிலையில், இந்த வெடிவிபத்தால் பெய்ரூட் நகரம் மிகப்பெரிய சேதத்தை சந்தித்துள்ளதால், லெபனானில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக அவசர உதவி மையத்தை லெபனான் இந்திய தூதரகம் அமைத்துள்ளது. இந்தியாவில் உள்ளவர்களை தொடர்பு கொள்ளவும் தேவையான உதவிகளை செய்யவும் தூதரகம் முயற்சித்து வருகிறது.

    உதவி எண்கள் அறிவிப்பு

    உதவி எண்கள் அறிவிப்பு

    யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் உடனே தொடர்பு கொள்ளுமாறு தொலைப்பேசி எண்களை அறிவித்துள்ளது. லெபனானில் உள்ள இந்தியர்கள் அமைதியாக இருக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ள இந்திய தூதரகம், இந்தியர்கள் யாருக்கேனும் வெடிவிபத்து தொடர்பாக உதவி தேவைப்படும்பட்சத்தில் தூதரகத்தை தொடர்புகொள்ளலாம் என்றும் இந்த அவசர உதவிமையம் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Lebanon Indian embassy set up 24 hours help line number for indians . Lebanon Indian embassy officials said that 2 big explosions heard in Central Beirut this evening. Everyone is advised to stay calm. Any Indian community member in need of any help, may contact our Help Line.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X