For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெய்ரூட் துறைமுகத்தில் மீண்டும் பயங்கர தீ விபத்து... தீயணைப்பில் ஹெலிகாப்டர்... மக்கள் அச்சம்!!

Google Oneindia Tamil News

பெய்ரூட்: பெய்ரூட் துறைமுகத்தில் வைக்கப்பட்டு இருந்த எண்ணெய் மற்றும் டயர் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பெய்ரூட் துறைமுகம் அருகே கடந்த மாதம் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து 190 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் இன்று தீ விபத்து ஏற்பட்டு இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகம் அருகே கிடங்கில் வைக்கப்பட்டு இருந்த அம்மோனியம் நைட்ரேட் ஆகஸ்ட் 4ஆம் தேதி வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்தப் பகுதியில் வசித்து வந்த 190 பேர் உயிரிழந்தனர். இது அந்த நாட்டில் மட்டுமின்றி உலக அளவில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

Lebanon: large fire erupts in Beirut port area

இந்த நிலையில் இன்று பெய்ரூட் துறைமுகத்தின் டயர் மற்றும் ஆயில் வைக்கப்பட்டு இருந்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடந்த பகுதியில் பெரிய அளவில் புகை மண்டலம் உருவாகியுள்ளது. ஹெலிகாப்டர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுவரை காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழப்பு பற்றிய எந்த விவரமும் தெரிய வரவில்லை.

ஆந்திர பிரதேசத்தில் தீ பிடித்து சேதம் அடைந்த கோவில் தேர்.. உருவான கலவரம்.. போலீசார் தீவிர விசாரணை ஆந்திர பிரதேசத்தில் தீ பிடித்து சேதம் அடைந்த கோவில் தேர்.. உருவான கலவரம்.. போலீசார் தீவிர விசாரணை

Lebanon: large fire erupts in Beirut port area

இந்த தீ விபத்தை அடுத்து அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் ஜன்னல்களை திறந்து ஒருவருக்கு ஒருவர் செய்திகளை பறிமாறி வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். தொழில் நிறுவனங்களில் இருப்பவர்களும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

English summary
Lebanon: large fire erupts in Beirut port area
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X