For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லெபனான் குண்டு வெடிப்பு பயங்கரம்.. ரத்த காயத்துடன் சிதறி ஓடிய மக்கள்.. பலர் பலி? அச்சத்தில் பெய்ரூட்

Google Oneindia Tamil News

பெய்ரூட்: லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த குண்டு வெடிப்பில் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

Recommended Video

    Lebanon தலைநகர் Beirut-ல் திடீர் குண்டுவெடிப்பு

    பெய்ரூட்டின் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மிகப்பெரிய குண்டு வெடிப்பால் மொத்த நகரமும் புகை மண்டாலமாக காட்சி அளிக்கிறது. கட்டிடங்கள் பயங்கரமாக சேதம் அடைந்துள்ளன நகரம் முழுவதும் பல்வேறு கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்து விழுந்தன. தலைநகர் பெய்ரூட் முழுவதும் மிகப்பெரிய நில அதிர்வை உள்ளது. எப்படி வெடித்தது என்பதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

    Lebanons Beirut huge explosion: Hundreds of people wounded the explosion

    இந்த வெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாக லெபனானின் சுகாதார அமைச்சர் ஹமாத் ஹசன் தெரிவித்துள்ளார். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதால் நாட்டின் அனைத்து பகுதியில் இருந்தும் ஆம்புனன்சுகள் அவசரமாக வரவழைக்கப்பட்டு காயம் அடைந்தவர்களை மருத்துவமைனைக்கு கொண்டு சென்றன. துறைமுகப் பகுதியைச் சுற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள், தீயணைப்பு வாகனங்கள் கடுமையாக போராடி வருகின்றன.

    லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பூமியை பிளக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு.. ஷாக் வீடியோலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பூமியை பிளக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு.. ஷாக் வீடியோ

    பெய்ரூட்டில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு மிகமிக சக்தி வாய்ந்ததாக இருந்தது. பல கட்டிடங்கள் சேதம் ஆகி உள்ளதுடன், சாலையில் நடந்து சென்ற மக்கள், தூக்கி வீசப்பட்டுள்ளனர், நகரமெங்கும் மக்கள் அசம்பாவித்தால் அலறலுடன் காணப்படுகிறார்கள். அதிர்ச்சியுடனும் அச்சத்துடனும் தவிக்கிறார்கள். பெய்ரூட் நரகமே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

    லெபானில் பிற்பகலில் நடந்த குண்டு வெடிப்பில் ஏராளமானோர் படுகாயம் அடைந்திருக்கலாம் என்றும் பலர் பலியாகி இருக்கலாம் என்றும் அச்சம் நிலவுகிறது. முழுமையாக தகவல்கள் விசாரணைக்கு பின்னர் தெரிய வரும்.

    English summary
    Hundreds of people have been wounded in a powerful explosion that ripped through Lebanon's capital, Beirut, according to the country's health minister.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X