For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய உதவியுடன் நேபாள் கட்டி வரும் நீர் மின் நிலையத்தில் குண்டுவெடிப்பு.. தொடரும் தாக்குதல்!

இந்தியாவின் உதவியுடன் நேபாள் கட்டிக்கொண்டு இருக்கும், நீர் மின் திட்ட கட்டிடத்தில் குண்டு வெடித்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    இந்திய உதவியுடன் நேபாளத்தில் கட்டப்படும் நீர் மின் நிலையத்தில் குண்டுவெடிப்பு- வீடியோ

    காத்மாண்டு: இந்தியாவின் உதவியுடன் நேபாள் கட்டிக்கொண்டு இருக்கும், நீர் மின் திட்ட கட்டிடத்தில் குண்டு வெடித்து இருக்கிறது. இது நேபாளத்தில் ஒரே மாதத்தில் நடக்கும் இரண்டாவது சம்பவம் ஆகும்.

    நேற்று மாலை இந்த வெடிவிபத்து சம்பவம் நடந்து இருக்கிறது. இந்த நீர் மின் நிலையம் இந்தியாவின் உதவியுடன் மேற்கு நேபாளத்தில் கட்டுப்பட்டு வந்தது. இன்னும் இரண்டு வாரத்தில் இந்த மின் நிலையம் இந்திய பிரதமர் மோடி மூலம் திறக்கப்பட இருந்தது.

    Less than 2 weeks after Embassy blast, explosion at India-built power project in Nepal

    அருண் 111 என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இந்த நீர் மின் நிலைய திட்டம், மர்ம நபர்களால் தாக்கப்பட்டு உள்ளது. யார் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது என்று இதுவரை தகவல் வெளியாகவில்லை. நேபாளத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யும் சமயத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    2020ல் இருந்து இந்த மின் நிலையம் முழுமையாக செயல்படும் என்று கூறப்பட்டது. இந்த மின் நிலைய கட்டுமான பணி காரணமாக இந்தியா நேபாள உறவு வலுவடைந்தது. ஆனால் தற்போது மர்ம நபர்கள் மூலம் இந்த கட்டிடம் தாக்கப்பட்டு சின்னாபின்னமாகி உள்ளது.

    இதில் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. இது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. சில வாரங்களுக்கு முன்பு நேபாளத்தின் இந்திய தூதரகம் முன்பு இதேபோல் குண்டுவெடித்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    In what could be an alarming incident for New Delhi inside a month, another bomb exploded at a location in Nepal having an India connection, on Sunday, April 29. The explosion took place at the office of a hydroelectricity project which India is helping to build in eastern Nepal and is due to be inaugurated by Prime Minister Narendra Modi in a few weeks, official sources said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X