For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெர்க்குரி, ப்ளூட்டோவில் உள்ள இடங்களுக்கு நீங்கள் பெயர் வைக்கலாம் தெரியுமா?

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: மெர்குரி மற்றும் ப்ளூட்டோ ஆகிய கோள்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மற்றும் கண்டுபிடிக்கப்படும் கிரேட்டர் எனப்படும் பள்ளங்களுக்கான பெயர்களை மக்களே தேர்வு செய்யலாம்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா மெர்குரி கோளில் ஆய்வு நடத்த மெசெஞ்சர் என்னும் விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் மெர்குரியில் ஆய்வு செய்து பல புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளது. மெசெஞ்சர் விண்கலம் வரும் 30ம் தேதியுடன் செயல் இழந்துவிடும் என்று கூறப்படுகிறது.

Let the people decide new place names on Mercury and Pluto

இந்நிலையில் மெசெஞ்சர் மெர்குரியில் உள்ள 5 கிரேட்டர்களின் புகைப்படத்தை எடுத்து அனுப்பி வைத்துள்ளது. அந்த 5 கிரேட்டர்கள் அதாவது பதிவுகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று நாஸா யோசித்தது. இந்நிலையில் அவைகளுக்கான பெயர்களை பொதுமக்களிடம் இருந்து பெற முடிவு செய்த நாஸா ஒரு போட்டியை அறிவித்தது.

அதாவது அந்த 5 கிரேட்டர்களுக்கு மக்கள் பெயர்களை பரிந்துரைக்கும் போட்டி நடத்தப்பட்டது. மக்கள் அனுப்பிய பெயர்களில் தேர்வு செய்யப்படும் 5 பெயர்கள் இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ளது.

1930ம் ஆண்டு கிளைட் டாம்பாக் கண்டுபிடித்த சிறிய கோளான ப்ளூட்டோவை நியூ ஹாரிசான்ஸ் விண்கலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. வரும் ஜூலை மாதம் ப்ளூட்டோவை அந்த விண்கலம் அடைந்து புகைப்படம் எடுத்து அனுப்பத் துவங்கும்.

அவ்வாறு ப்ளூட்டோவில் கண்டுபிடிக்கப்படும் கிரேட்டர்களுக்கும் மக்களிடம் இருந்து பெயர்கள் பெறப்பட உள்ளது.

English summary
People can name the craters in Mercury and Pluto now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X