For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.எஸ்.ஐ.எஸ். விஸ்வரூபத்தை முன்கூட்டியே கணித்த கடிதம்! பின்லேடன் மறைவிடத்தில் கண்டெடுப்பு!!

By Mathi
Google Oneindia Tamil News

லண்டன்: ஈராக்கின் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினரின் செயல்பாடுகள் மிக கொடூரமானதாக இருக்கும் என்று எச்சரிக்கைக் கூடிய கடிதம் ஒன்று கொல்லப்பட்ட பின்லேடனின் மறைவிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Letter found in Bin Laden’s hideout warns of IS brutality

அல் குவைதா இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்த போது அமெரிக்கா அதிரடிப்படையால் படுகொலை செய்யப்பட்டார். அந்த இடத்தில் பின்லேடனின் சகாக்கள் ஒருவர் எழுதி வைத்த 21 பக்க கடிதம் ஒன்றும் அப்போது கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்தக் கடிதத்தில், உருவாகி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் பிற்காலத்தில் மிக மோசமான நடந்து கொள்வர் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குளோரின் நச்சு வாயு பயன்பாடு, மசூதிகள் தகர்ப்பு, நாசகார ஆயுதங்கள் தயாரிப்பு போன்றவற்றில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் ஈடுபட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதம் எச்சரித்தபடியே இன்று ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் விஸ்வரூபமெடுத்துள்ளது. இங்கிலாந்தை விட மிகப் பெரிய அளவில் சிரியா மற்றும் ஈராக்கில் பகுதிகளை கைப்பற்றியுள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம். இந்த இயக்கத்தில் மொத்தம் 10 ஆயிரம் பேர் வரை இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் ஈராக் முன்னாள் அதிபர் சமாத் உசேன் ஆட்சிக் காலத்தில் ராணுவத்தில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A letter found at slain Al Qaeda chief Osama Bin Laden’s hideout in Pakistan warned of the rise of a new Islamic extremist group capable of extreme brutality that could damage Al Qaeda’s reputation, media reported Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X