For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அணு ஆயுதப் போர் மீண்டும் வந்தால் உலகம் மீண்டு வரவே வராது- ஆய்வில் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

கொலராடோ: உலகில் மீண்டும் அணு ஆயுதப் போர் வந்தால் 20 வருஷத்துக்கு கடும் குளிராக இருக்கும் என்றும் சாப்பாட்டுக்குப் பெரும் பஞ்சம் ஏற்படும் என்றும் கடுமையான தகவலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

பூமியில் மீண்டும் ஒரு அணு ஆயுத யுத்தம் மூண்டால் என்ன ஆகும் என்பது குறித்து கொலராடோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.

அந்த ஆய்வுக்காக அவர்கள் கம்ப்யூட்டர் மூலம் ஒரு கிளைமேட் மாடலை உருவாக்கி ஆய்வு செய்து அதன் முடிவை வெளியிட்டுள்ளனர். அணு ஆயுத யுத்தம் வெடித்தால் பூமிக்கு என்னாகும் என்பதை இதில் அவர்கள் சொல்லியுள்ளனர்.

100 சிறிய அணுகுண்டுகள்:

100 சிறிய அணுகுண்டுகள்:

100 சிறிய அணுகுண்டுகள் பூமியில் வெடித்தால் என்ன மாதிரியான விளைவுகளை இந்த பூமி சந்திக்கும் என்பதே இவர்களின் ஆய்வாகும்.

அழியும் மனிதகுலம்:

அழியும் மனிதகுலம்:

அப்படி ஒரு யுத்தம் நடந்தால் மனிதகுலமானது, பல ஆண்டுகளுக்குப் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

தலைவிரித்தாடும் பஞ்சம்:

தலைவிரித்தாடும் பஞ்சம்:

உலகம் முழுவதும் பஞ்சம் தலைவிரித்தாடுமாம், காடுகள் அழிந்து போய் விடும். கடும் குளிரால் உயிர்கள் மட்டுமல்லாமல் உலகமே உறைந்து போய் விடுமாம்.

பலியாகும் உயிர்கள்:

பலியாகும் உயிர்கள்:

கோடிக்கணக்கில் உயிர்கள் பலியாகும். பல பகுதிகளில் உயிரினமே அழிந்து போய் விடுமாம். கடும் குளிர் நிலையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வரை உலகம் உறைந்து போய்க் கிடக்குமாம்.

உயிரினங்களின் அழிவு:

உயிரினங்களின் அழிவு:

இப்படிப்பட்ட ஒரு ஆய்வை கம்ப்யூட்டர் மூலம் மேற்கொண்டது இதுவே முதல் முறையாகும். உலகின் பாதிப் பகுதியில் உயிரினங்கள் அழிந்து போய் விடும் என்று இந்த ஆய்வு கூறுகிரது.

குட்டி அணுகுண்டுகள்தான்:

குட்டி அணுகுண்டுகள்தான்:

மிகச் சிறிய அளவிலான அணுகுண்டுகளே இந்த உலகை அழிக்கப் போதுமானது என்றும் இந்த அதிர்ச்சி ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

உறிஞ்சப்படும் சூரிய ஒளி:

உறிஞ்சப்படும் சூரிய ஒளி:

அணு குண்டுகள் வெடிக்கும்போது கருப்பு கார்பன் வெளியேறும். இதன் அளவு 5 மெகா டன்களாக இருக்கும்போது அது அப்படியே சூரிய ஒளியை உறிஞ்சி எடுத்துக் கொள்ளும்.

கார்பன் என்னும் எமன்:

கார்பன் என்னும் எமன்:

இதனால் பூமியே குளிரில் மூழ்கிப் போகும். மேலும் இந்த கருப்பு கார்பன் பொழிவானது உயிர்களையும் உறிஞ்சிக் குடிக்கும் நச்சாகும்.. பல லட்சம் உயிர்களை இது பொசுக்கி விடும்.

2 டிகிரிதான் வெப்பம்:

2 டிகிரிதான் வெப்பம்:

அணு யுத்தம் நடந்த முதல் வருடத்தில் பூமியில் வெப்ப நிலையானது 1 டிகிரி சென்டிகிரேட் அளவுக்குத்தான் இருக்கும். இது பாரன்ஹீட்டில் 2 டிகிரியாகும்.

பயிர்கள் கருகும்:

பயிர்கள் கருகும்:

2 ஆவது வருடத்தில் பயிர்கள் வளரும் கால அளவானது 10 முதல் 40 நாட்களாக சுருங்கிப் போய் விடும்.

புற்றுநோய் அதிகரிக்கும்:

புற்றுநோய் அதிகரிக்கும்:

5 ஆவது வருடத்தில் வெப்ப நிலையானது 3 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும். மேலும் மழைப் பொழிவும் கூட வழக்கத்தை விட 9 சதவீதம் குறைந்து போய் விடும். ஓசோன் படலத்தின் அடர்த்தியானது 25 சதவீதம் குறைந்து விடும். இதனால் பூமியைத் தாக்கும் அல்ட்ரா வயலட் கதிர்வீச்சு அதிக அளவில் இருக்கும்.

ஓசோன் அழியும்:

ஓசோன் அழியும்:

10 ஆவது வருடத்தில் ஓசோன் படலம் சற்று மேம்பட்டு தற்போது இருப்பதை விட 8 சதவீத அளவு குறைவாக மாறும்.

இறுதியாக்கும் 20 வருடம்:

இறுதியாக்கும் 20 வருடம்:

20 ஆவது வருடத்தில் பூமியின் வெப்ப நிலை 1 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும்.

ஒரு பகுதியே அழியும்:

ஒரு பகுதியே அழியும்:

தற்போதைய நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் தலா 15 கிலோடன் எடை கொண்ட 50 அணுகுண்டுகளை வெடித்தால் கூட போதும் பெரும் மாற்றத்தை இரு நாடுகள் மட்டுமல்லாமல் பூமியின் ஒரு பகுதியும் சந்திக்க நேரிடும்.

அமைதியே நிலவ வேண்டும்:

அமைதியே நிலவ வேண்டும்:

மொத்ததில் அணு ஆயுத யுத்தம் வந்தால் அதனை நடத்தியவர்கள் கூட உயிருடன் இருக்க முடியாது என்பதுதான் நிதர்சனம். இதயெல்லாம் யோசித்தாவது வெள்ளைப் பூக்களை உலகம் எங்கும் மலரவிடுங்கள்.

English summary
The terrible fate of Earth after a nuclear war has been mapped out using computer models for the first time. Worldwide famine, deadly frosts, global ozone losses of up to 50 per cent and more would greet any inhabitants of the planet still remaining after a nuclear conflict. And the researchers hope their study of what they call a relatively 'small' nuclear war will serve as a deterrent against such weapons being used by any nation in the future.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X