For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தோனேசிய விமானம் கடலில் விழுந்தது.. 189 பயணிகளும் பலி

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜாவா கடலில் விமான பாகங்கள்.. எரிப்பொருள் மிதக்கும் வீடியோ

    ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் காணாமல் போன விமானம் கடலில் விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்திருக்கலாம் என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    லயன்ஏர் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ஜேடி 610 என்ற விமானம் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு 6.20 மணிக்கு புறப்பட்டது. இதையடுத்து அந்த விமானத்தின் தொடர்பு காலை 6.33 மணிக்கு துண்டிக்கப்பட்டது.

    Lion Air passenger plane flying from Jakarta crashes into the sea

    அதாவது புறப்பட்ட 13 நிமிடங்களில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 200 பேர் பயணம் செய்யக் கூடிய இந்த விமானத்தில் 189 பேர் பயணம் செய்தனர்.

    [இன்னும் கண்டுபிடிக்கப்படாத மலேசிய விமானம்.. அடுத்தடுத்த விபத்தில் சிக்கும் இந்தோனேஷிய விமானங்கள்]

    நடு வானில் மாயமான விமானம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த விமானம் ஜாவா கடற்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிகிறது. அந்த கடற்பகுதியில் விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் 189 பேரின் நிலை என்ன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் 189 பயணிகளும் விமான ஊழியர்களும் பலியாகியிருப்பர் என மீட்பு குழுவினர் கூறியுள்ளனர்.

    English summary
    A passenger plane travelling from Jakarta to Pangkal Pinang in Indonesia has crashed into the sea, according to the country’s search and rescue agency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X