For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவின் வுஹானில் அதிரடி சட்டம்.. சிங்கம், பாம்பு, வவ்வால்,எறும்பு திண்ணிகளை இனி சாப்பிட முடியாது

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் வெடிப்பின் மையமான சீன நகரமான வுஹானில் சிங்கம், புலி, , மயில், பாம்பு, வவ்வால் மற்றும் எறும்புதிண்ணி உள்ளிட்ட வன விலங்குகளின் நுகர்வு தடைசெய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    Wuhan bans consumption of wild animals

    அமெரிக்காவின் உயர்மட்ட தொற்று-நோய்கள் நிபுணர் டாக்டர் அந்தோனி பாசி வெட் சந்தையில் வனவிலங்குகள் இறைச்சி வர்த்தகத்தை நிறுத்துமாறு அழைப்பு விடுத்த சில வாரங்களிலேயே சீனா இந்த முடிவினை

    Lion, bat and pangolin off the menu as Wuhan bans consumption of wild animals

    கொரோனா வைரஸ் வாவ்வால்களில் இருந்தே தோன்றியதாவும், இது வுகானின் ஈரமான சந்தையில் (வெட் மார்க்கெட்) இருந்தே உலகிற்கு பரவியது நம்பப்படுகிறது.

    சீனா கண்டபடி காட்டு விலங்குகளை உண்பதாலயே வைரஸ் தொற்று நோய்கள் பரவுவதாக உலகின் பல நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் உயர்மட்ட தொற்று-நோய்கள் நிபுணர் டாக்டர் அந்தோனி பாசி வெட் சந்தையில் வனவிலங்குகள் இறைச்சி வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    இந்திய சீனா எல்லை பிரச்சனை.. அமெரிக்காவின் கருத்து முட்டாள்தனமான செயல்.. சீனா கொதிப்புஇந்திய சீனா எல்லை பிரச்சனை.. அமெரிக்காவின் கருத்து முட்டாள்தனமான செயல்.. சீனா கொதிப்பு

    இதையடுத்து வன விலங்குகளின் இனப்பெருக்கம், வேட்டை மற்றும் நுகர்வு ஆகியவற்றை தடைசெய்து வுஹான் மாநகராட்சி புதிய கொள்கையை நடைமுறைக்கு வந்துள்ளது. சிங்கம், புலி, மயில் மற்றும் பாங்கோலின் உள்பட சில வன விலங்குகளை இறைச்சி சந்தையில் இனி விற்க கூடாது. மேலும் இந்த உணவுகளை சாப்பிடவும் வேட்டையாடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. . புதிய சட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மக்கள் வனவிலங்குகளை சாப்பிடுவதைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வவ்வால் மற்றும பாம்பு உள்ளிட்ட பிற உயிரினங்களும் சாப்பிட தடை செய்யப்பட்டுள்ளன.

    English summary
    Chinese city of Wuhan bans consumption of wild animals like Lion, bat and pangolin
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X