For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் அதிகரிக்கும் தீவிரவாத தாக்குதல்கள் ... ஒரே வருடத்தில் இத்தனை கொலைகளா?

நேற்று டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கி சூடு போலவே இந்த ஒரே வருடத்தில் மட்டும் பல மோசமான தாக்குதல்கள் அமெரிக்காவில் நடத்தப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வாலிபர் ஒருவர் நேற்று தேவாலயத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இவர் நடத்திய மோசமான துப்பாக்கி சூட்டில் மொத்தம் 26 பேர் பலியாகினர்.

அதேபோல சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்கவின் லாஸ் வேகாஸ் பகுதியில் மிக மோசமான அளவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 50க்கும் அதிகமான மக்களை பலியாகினர்.

கடந்த சில வருடங்களாகவே அமெரிக்காவில் மிக அதிக அளவில் துப்பாக்கி சூடும் தீவிரவாத தாக்குதலும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஒரு வருடத்தில் மட்டும் அமெரிக்காவில் 10க்கும் அதிகமான கோர தாக்குதல்கள் நடந்து இருக்கிறது.

கொலைகளின் நாடா அமெரிக்கா

கொலைகளின் நாடா அமெரிக்கா

அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாகவே துப்பாக்கி சூடும் தீவிரவாத தாக்குதலும் நடத்தப்பட்டு வருகின்றது. மிகவும் முக்கியமான மக்கள் நடமாடும் இடங்களில் அதிக அளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றது. முன்பெல்லாம் பெரும்பாலும் தீவிரவாத இயக்கங்கள் இந்த தாக்குதலை நடத்தும். ஆனால் சமீப காலத்தில் தனி மனிதர்களே பல்வேறு காரணங்களுக்காக இவ்வாறு கொடூர தாக்குதலை நடத்துகின்றனர்.

டெக்சாஸ் சர்ச்சில் நடந்த தாக்குதல்

டெக்சாஸ் சர்ச்சில் நடந்த தாக்குதல்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் பாப்டிஸ்ட் தேவாலயம் ஒன்று உள்ளது. அந்த பகுதியில் அமைக்கப்பட்ட முதல் பாப்டிஸ்ட் தேவலாயமான அதில் நேற்று காலை பிரார்த்தனை கூட்டம் நடந்தது. அப்போது வாலிபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் வந்து கண்மூடித்தனமாக சுட்டார். டேவின் பேட்ரிக் என்ற இவர் நடத்திய மோசமான துப்பாக்கி சூட்டில் மொத்தம் 26 பேர் பலியாகினர். காயமடைந்த நிறைய பேர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கின்றனர்.

ஃபுளோரிடாவில் நடந்த தாக்குதல்

ஃபுளோரிடாவில் நடந்த தாக்குதல்

இந்த வருட தொடக்கத்தில் ஃபுளோரிடா மாகாணத்தில் இருக்கும் 'ஹாலிவுட்' ஏர்போர்ட்டில் இந்த தாக்குதல் நடைபெற்றது. ஏர்போர்ட்டில் கவனிப்பு இன்றி கிடந்த வெடிகுண்டு வெடித்ததின் காரணமாக அங்கு 5 பேர் மரணம் அடைந்தனர். 36க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். 120,000 பேர் இடம்மாற்றப்பட்டனர். இந்த செயலை செய்த 'சண்டிகோ' என்ற இளைஞர் அமெரிக்க ராணுவத்தில் பணி புரிந்து அதன் மூலம் மனநலம் பிறழ்ந்தவர் என கூறப்படுகிறது.

அலெக்ஸாண்டிரியா பகுதியில் நடந்த தாக்குதல்

அலெக்ஸாண்டிரியா பகுதியில் நடந்த தாக்குதல்

அமெரிக்கவின் அலெக்ஸாண்டிரியா பகுதியில் கடந்த ஜூன் 17 ஆம் நாள் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது. அங்கு இருக்கும் அமெரிக்க காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான பேஸ்கெட் பால் மைதானத்தில் இந்த தாக்குதல் நடந்தது. துப்பாக்கியோடு உள்ளே வந்த நபர் வேகமாக சுட்டதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் மரணம் அடைந்தார். இதில் 30 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய ஜேம்ஸ் என்ற நபர் அங்கேயே சுடப்பட்டார்.

லாஸ் வேகாஸ் துப்பாக்கி சூடு

லாஸ் வேகாஸ் துப்பாக்கி சூடு

லாஸ் வேகஸில் கடந்த அக்டோபர் 1ல் நடந்த இந்த தாக்குதல் மிக மோசமான தாக்குதலாக பார்க்கப்படுகிறது. 65 வயது முதியவர் ஒருவர் 20,000 கூடியிருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் புகுந்து சரமாரியாக சுட்டார். 15 நிமிடம் அவர் விடாமல் சுட்டதில் 56 பேர் மரணம் அடைந்தனர். இதற்காக இவர் மொத்தம் 2 மாதங்கள் திட்டம் தீட்டி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவரை போலீஸ் முயற்சி செய்தும் பிடிக்க முடியாததால் அமெரிக்க ராணுவம் வந்து கைது செய்தது.

நியூயார்க்கில் நடந்த கொடூர அட்டாக்

நியூயார்க்கில் நடந்த கொடூர அட்டாக்

நியூயார்க் பகுதியில் இருக்கும் தனியார் பார்க் ஒன்றில் கடந்த அக்டோபர் 31ல் இந்த தாக்குதல் நடந்தது. பார்க் மொத்தமும் அமைதியாக இருந்த நேரத்தில் எங்கிருந்தோ காரில் வந்த 'ஷபியுல்லா ஹபிபுல்லா' என்ற நபர் வேகமாக துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார். இரண்டு துப்பாக்கியை வைத்து மாறி மாறி சுட்டு இருக்கிறார். இந்த மோசமான தாக்குதலில் மொத்தம் 8 பேர் மரணம் அடைந்தனர். 45 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த நபர் உஸ்பெகிஸ்தானில் இருந்த அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
There are plenty of shootings and bomb killings took place in America recent days. A satistic says that in 2017 more that 10 worst case shoots took place in America.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X