For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லாக்டவுன் விஷயத்தில்.. சீனாவுக்கு இந்தியாவுக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா? ஒரே நாள், ஒரே டைம்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: லாக் டவுன் விஷயத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இன்று முதல் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதேநேரம் சீனாவில் இன்று முதல் லாக்டவுன் நீக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பிரச்சனையால் ஹுபே மாகாணத்தில் வுகான் தவிர மற்ற பகுதிகளில் லாக் டவுன் நீக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது சீனா

    கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக கடந்த ஜனவரி 23ம் சீனாவின் ஹுபே மாகாணம் லாக்டவுன் செய்யப்பட்டது. அந்த மாகாணத்தின் தலைநகரான வுகானில் அடுத்த சில நாட்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது.

    இதனால் இப்போது இந்தியாவில் உள்ளதை போல் சீனாவின் அனைத்து நகரங்களுக்கும் ஹுபே மாகாணத்துடன் உள்ள பயணத்தொடர்பை சீனா துண்டித்தது. 1.5 கோடி மக்கள் வாழ்ந்து வரும் வுகான் நகரம் மொத்தமும் தனிமைப்படுத்தப்பட்டது. இதேபோல் ஹுபே மாகாணத்தின் பிற பகுதிகளும் லாக் டவுன் செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன.

    காட்டுத்தீ போல்

    காட்டுத்தீ போல்

    இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக கொரோனா வைரஸ் சீனாவின் ஹுபே மாகாணத்தில் அதிவேகமாக பரவியது. சீனாவின் பிற பகுதிகளுக்கும் பரவியது. மற்ற பகுதிகளை விட ஹுபே மாகாணத்தில் காட்டுத்தீ போல கொரோனா பரவியது. காற்றில் விஷ கிருமி பரவி அதை நுகர்ந்தால் எப்படி மக்கள் பாதிக்கப்படுவோர்களா அந்த அளவுக்கு மக்கள் படுவேகமாக பாதிக்கப்பட்டனர்,

    3200 பேர் பலி

    3200 பேர் பலி

    100, 500,1000,10000, 200000, 40000 என படுவேகமாக அதிகரித்தது. சரியாக இரண்டு மாதத்திற்குள்ளாக 80 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் சீனாவில் பரவிவிட்டது. 3200 பேர் உயிரிழந்தனர். ஆனால் அதன்பிறகு கொரோனா பரவும் வேகம் சீனாவில் படிப்படியாக குறைந்தது. மார்ச் 19ம் தேதிக்கு பிறகு சீனாவில் கொரோனா வைரஸ் புதிதாக உள்ளூர் மக்களுக்கு பாதிக்கவில்லை என சீன அரசு சொல்கிறது.

    வுகானில் ஏப் 8 வரை

    வுகானில் ஏப் 8 வரை

    சீனாவில் வுகானில் மட்டும் ஒற்றை இலக்கத்தில் உயிரிழப்பும், பாதிப்பும் ஏற்பட்டு வருவதாக சீனா கூறியுள்ளது. இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி ஹுபே மாகாணத்திற்கு விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடுகளை சீனா இன்று அதிகாலை 12 மணி முதல் நீக்கி உள்ளது. எனினும் வுகானில் மட்டும் ஏப்ரல் 8 வரை கட்டுப்பாடு இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

    மோடி லாக் டவுன் அறிவிப்பு

    மோடி லாக் டவுன் அறிவிப்பு

    சீனா லாக் டவுனை இன்று நீக்கிய அதிகாலை 12 மணி முதல் இந்தியா முழுவதும் லாக்டவுன் செய்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். சீனா அரசு கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக இரு மாதங்களுக்கு பிறகு அறிவித்துள்ள நிலையில், கொரோனா இந்தியாவில வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு லாக் டவுன் செய்யப்படுவதாக தொலைக்காட்சி முன்பு தோன்றி பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதன் மூலம் லாக்டவுன் சீனாவில் முடிந்து வரும் நிலையில், இந்தியாவில் ஆரம்பம் ஆகி உள்ளது.

    தனிமைப்படுத்துதல்

    தனிமைப்படுத்துதல்

    சீனா அரசு கொரோனாவை தடுக்க செய்ததை போல், இந்திய அரசும் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்தையும் முடக்கி உத்தரவிட்டுள்ளது. மக்களை தனிமைப்பபடுத்த கடும் முயற்சிகளை செய்து வருகிறது. மக்கள் தனிமையில் இருப்பது மட்டுமே கொரோனாவை தடுக்க இப்போதைக்கு ஒரே வழி என்ற சீனாவின் பாணியை இந்தியா உள்பட உலகமே கடைபிடித்து வருகின்றன. விரைவில் எல்லாம் சரியாகும் என நம்புவோம்.

    English summary
    lock down india vs china: china relaxed from today, but india starts 21 days total country lock down from today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X