For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லண்டனில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழர் போராட்டம்- கதவுகளை மூடிவிட்டு ஓடிய இந்திய தூதரக அதிகாரிகள்

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக மனு கொடுக்க வந்த தமிழர்களை பார்க்காமல் இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளே ஓடி ஒளிந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    லண்டன் தூதரகம் முன்பு தமிழர்கள் ஸ்டெர்லைட் போராட்டம்-வீடியோ

    லண்டன்: ஸ்டெர்லைட்டுக்கு தடை விதிக்க கோரி மனு கொடுக்க வந்த தமிழர்களை பார்க்க விரும்பாமல் இந்திய தூதரகத்தின் அதிகாரிகள் கதவை மூடி கொண்டனர். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பரபரப்பாகி வருகிறது.

    தூத்துக்குடியில் உள்ள காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் சுவாச கோளாறு, உடல்நல குறைபாடு, இதய பிரச்சினைகள் ஆகியன ஏற்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். இதனால் இந்த ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மற்றும் சுற்றியுள்ள மக்கள், கல்லூரி மாணவர்கள், குழந்தைகள் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.

     London ambassadors closes the office door

    இவர்களுக்கு ஆதரவாக லண்டனில் அந்த ஆலையின் உரிமையாளர் வீடு முன்பு கடந்த வாரம் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிக்கக் கோரி மனு கொடுக்க சில தமிழர்கள் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு குடும்பத்துடன் சென்றனர்.

    கைக் குழந்தைகளுடன் வந்த அவர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. தாங்கள் மனு கொடுக்க வந்ததை கூறிய பிறகும் இந்திய தூதரக அதிகாரிகள் கதவை மூடிவிட்டு ஓடுகிறார். இதை தொடர்ந்து பார்வையாளர்கள் உள்ளே வரும் வாசல் வழியாக வாருங்கள் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

    அதன்படி அந்த வாசல் வழியாக போய் கதவை தட்டினால் உள்ளே இருந்தபடியே பார்த்து கொண்டிருக்கின்றனரே தவிர யாரும் கதவை திறக்கவில்லை. மனு கொடுக்க வந்த தமிழர்களை பார்த்து ஓடி ஒளிகின்றனர் என்று கூறிய அங்கேயே இந்திய தூதரக அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    தமிழர்களை இந்திய தூதரக அதிகாரிகள் மதிப்பதே இல்லை என்ற குற்றச்சாட்டையும் அவர்கள் முன்வைத்தனர்.

    English summary
    London ambassadors closes the office door as the Tamil organisation go to submit memorandam in the Sterlite issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X