For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீக்கியரை தாக்கிவிட்டு முஸ்லீமே வெளியே போ என்று கூச்சல்.. இங்கிலாந்துகாரர் செய்த அடாவடி!

இங்கிலாந்தில் பஞ்சாப்பை சேர்ந்த சீக்கியர் ஒருவர் மோசமாக தாக்கப்பட்டு இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் பஞ்சாப்பை சேர்ந்த சீக்கியர் ஒருவர் மோசமாக தாக்கப்பட்டு இருக்கிறார். இவரை தாக்கிய நபர் முஸ்லீமே வெளியே போ என்று கூச்சலிட்டு இருக்கிறார்.

இங்கிலாந்தில் அவ்வப்போது முஸ்லீம்கள் தாக்கப்படுவது வழக்கும். ஆனால் அங்கு இருக்கும் சீக்கியர்களுக்கு பெரிய வகையில் எந்த பிரச்சனையும் ஏற்பட்டது இல்லை.

அமெரிக்காவில்தான் சீக்கியர்கள் அடிக்கடி தாக்கப்படுவது வழக்கம். ஆனால் முதல்முறையாக இங்கிலாந்தில் சீக்கியர் ஒருவர் முஸ்லீம் என கருதப்பட்ட தாக்கப்பட்டுள்ளார்.

 என்ன சம்பவம்

என்ன சம்பவம்

'ஈகோசீக்' என்று அமைப்பை சேர்ந்த ரவநீத் சிங் என்ற நபர் பஞ்சாப்பில் இருந்து இங்கிலாந்து சென்றுள்ளார். அங்கு பாராளுமன்றத்தில் நடக்கும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள அவர் அங்கு சென்றுள்ளார். பாராளுமன்றத்திற்குள் இருக்கும் லண்டன் பாராளுமன்ற உறுப்பினர் தன்மான்ஜீத் சிங் தேசி என்பவரை காண வெளியே காத்திருந்துள்ளார்.

 மோசமான தாக்குதல்

மோசமான தாக்குதல்

இவர் காத்திருக்கும் போதே அங்கு ஒரு லண்டன் நபர் வந்துள்ளார். முதலில் இவரிடம் எதோ உதறிவிட்டு தலையைப்பிடித்து ஆட்ட தொடங்கியுள்ளார். ரவநீத், அந்த நபரை பைத்தியம் என்று நினைத்து இருக்கிறார்.

 வெளியே போ

வெளியே போ

ஆனால் அதன்பின் மோசமாக தாக்கியுள்ளார். அதோடு தலை பாகையை பிடித்து இழுத்தும் இருக்கிறார். கடைசியில் அங்கே போலீஸ் வந்தவுடன் ''முஸ்லீமே நாட்டைவிட்டு வெளியே போ'' என்று கத்திவிட்டு வேகமாக ஓடி மறைந்துள்ளார்.

 யார் இவர்

யார் இவர்

இதுகுறித்து அவர் அந்த மாநாட்டில் பேசியுள்ளார். மேலும் அங்கு இருக்கு சிசிடிவி கேமராவில் அவர் உருவம் பதிவாகி உள்ளது. லண்டன் போலீஸ் இவரை தேடி வருகிறது.

English summary
London guys attacks Sikh man Ravneet Singh outside UK Parliament, later shouts Muslim go back. Ravneet Singh, who is from India is a South Asia project manager of EcoSikh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X