For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுவிட்சர்லாந்தில் ஞானலிங்கேச்சுரத்தில் நடந்த அழகொப்பனைத்திருவிழா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பாரீஸ்: சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகர் பேர்ன் மாநிலத்தில் உள்ள ஞானலிங்கேச்சுரத்தில் அழகொப்பனைத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. 26. 11. 2015 வியாழக்கிழமை பிள்ளையார் கதை தொடங்கியது. 07. 12. 2015 திங்கட்கிழமை முதல் 16. 12. 2015 புதன்கிழமை வரை திருவிழா நடைபெற்றது.

ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் முழு முதற்கடவுள் சிவபெருமான் இணையடிதொழுது அன்புவழிச் சைவசமயத்தினை தெய்வத் தமிழ் வழிபாட்டில் ஒழுகும் திருக்கோவில் ஆகும். இத்திருக்கோவில் இன்று இராசகோபுரத்துடன் மிளிர்வது திருத்தொண்டர் உழைப்பும், திருவருட்கொடையும், ஞானாம்பிகை உடனாயஞானலிங்கேச்சுரர் திருக்கருணையும் ஆகும்.

Lord Shiva temple festival was held in Switzerland

தற்காலிக இடத்தில் திருக்கோவில் அமைந்திருந்து முதன்முறையாக அலங்கார ஒப்பனையில் வெளியில் உலா வந்த திருமூர்த்தி பிள்ளையார் ஆவார். இப்பெருமான்நோன்பாம் பிள்ளையார் கதை இன்று ஞானலிங்கேச்சுரத்தில் அழகொப்பனைத்திருவிழாவாக (அலங்காரத்திருவிழா) சிறப்புடன் நடந்து வருகிறது. 26. 11. 2015வியாழக்கிழமை பிள்ளையார் கதை தொடங்கப்பெற்று, 07. 12. 2015 திங்கட்கிழமைமுதல் 16. 12. 2015 புதன்கிழமை வரை திருவிழா நடைபெற்றது.

Lord Shiva temple festival was held in Switzerland

திருவும் அருளும் நிறைபொங்க, நாளும் நல்லோர் மேன்மைகொள் சைவநெறிஅடியார் திருக்குலம் முழுமுதற் கடவுள் அடிதொழும், அன்பும் அறமும்தளைத்து விளங்கும், இனிய தெய்வத் தமிழ் வழிபாட்டில் நாளும் சிறக்கும்திருவருள்மிகு ஞானலிங்கேச்சுரத்தில் எழுந்தருளி, அப்பமோடு அவல் பொரிஅடியார்களிடம் விரும்பி ஏற்று, முத்தமிழ் நல்லருளும் ஞானகருணாகரன்நோன்பு பிள்ளையார்கதை திருவிழாவாக நடைபெற்று 16. 12. 2015 ஞானலிங்கேச்சுரத்து அழகொப்பனைத்திருவிழா நிறைவடைந்தது.

வேழமுகத்தோன் வேழமுகத்து அசுரனை ஒறுத்த பெரும்போர் திருக்கோவிலிற்குள், ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் ஆலயத்தில் இனிதே நடைபெற்றது.

English summary
Lord Ganesha festival was held in Switzerland recently with religious fervour.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X