For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரீஸில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர சப்தத்துடன் வெடித்த சிலிண்டர்: குண்டோ என மக்கள் அச்சம்

By Siva
Google Oneindia Tamil News

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இன்று ஏதோ பயங்கரமாக வெடிக்கும் சப்தம் கேட்டது. கேஸ் கசிவால் சிலிண்டர் வெடித்த சப்தம் தான் அது என்று போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஃபெர்ரான்டி கல்லூரி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று ஏதோ பயங்கரமாக வெடிக்கும் சப்தம் கேட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு பணியினர் அந்த கட்டிடத்தில் இருந்தவர்களை அவசர அவசரமாக வெளியேற்றினர்.

அந்த இடம் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள நிலையில் ஏதோ வெடிக்கும் சப்தம் கேட்ட மக்கள் அச்சம் அடைந்தனர். ஆனால் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் கேஸ் கசிந்ததால் சிலிண்டர் வெடித்த சப்தம் தான் அது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தால் அடுக்குடிமாடி குடியிருப்பு சேதம் அடைந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த கட்டிடத்தை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

முன்னதாக கடந்த நவம்பர் மாதம் பாரீஸின் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிளால் சுட்டதில் 130 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Loud explosion was heard in a residential building in Paris on friday. Police confirmed that gas leak is the reason for the explosion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X