For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'லவ் ஃபிரம் மான்செஸ்டர்'.. பிரிட்டன் ராணுவ விமானத்தில் வாசகம்.. எதற்கான கோடுவேர்டு தெரியுமா?

பிரிட்டன் நாட்டில் இருந்து சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் மீது வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு பிரிட்டன் நாட்டு ராணுவத்தினர் விமானங்களில் இந்த வாசகத்தை எழுதி அனுப்புவர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

லண்டன்: சிரியாவில் உள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் மீது வான் வழித் தாக்குதல் நடத்தப்படும் என்பதற்கு பிரிட்டன் நாட்டு ராணுவத்தினர் பயன்படுத்திய கோடுவேர்ட்தான் இந்த லவ் ஃபிரம் மான்செஸ்டர். இந்த செய்தியை தி டெலிகிராஃப் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

பிரிட்டன் நாட்டிலிருந்து சிரியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்படும். அப்போது பிரிட்டன் நாட்டுக்கு சொந்தமான ராணுவ விமானங்கள் மூலம் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதை குறிக்கும் வகையில் அந்நாட்டிலிருந்து சிரியாவுக்கு தாக்குதல் நோக்கத்தில் அனுப்பப்படும் ராணுவ விமானங்களில் லவ் ஃபிரம் மான்செஸ்டர் என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும்.

Love from Manchester: Message on bomb from RAF to ISIS

அப்படி என்றால் பிரிட்டனிலிருந்து சிரியாவில் உள்ள பயங்கரவாத அமைப்பை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் என்பதாகும். ராயல் விமான நிறுவனம் எனப்படும் பிரிட்டன் நாட்டிலிருந்து வெடிகுண்டுடன் சென்ற ஜெட் விமானத்தில் மேற்கண்ட வாசகம் எழுதியிருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படம் உண்மையானவைதான் என்று ராயல் விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். இந்த தகவல்கள் கடந்த வாரம் மான்செஸ்டரில் பாப் பாடகி ஆரியானா கிராண்டேவின் இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து வெளியாகியுள்ளன.

கடந்த 1939- 1945-ஆம் ஆண்டு வரை இரண்டாம் உலக போர் நடைபெற்றது. அப்போது ஜப்பான் நாட்டை நோக்கி வீசப்படும் வெடிகுண்டுகளில் ராணுவத்தினர் சில தகவல்களை எழுதியிருந்தனர்.

அதேபோல் நியூயார்க்கில் கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலின்போதும் வெடிகுண்டுகளில் தகவல்கள் எழுதப்பட்டிருந்தன என்பதை நியூயார்க் நகர போலீஸாரும், அந்நாட்டு தீயணைப்புத் துறையினரும் தெரிவித்தனர்.

English summary
Love from Manchester was a message from the Royal Air Force to the Islamic State. The message was posted on a bomb meant for air strikes against the Islamic State terror group following the concert attack, according to a media report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X