
இப்படியும் ஒரு கல்யாணமா? - மணப்பெண் தோழியாக மாறிய பணிப்பெண்.. நடுவானில் திருமணம் நடந்தது எப்படி?
லாஸ் வேகாஸ்: அமெரிக்காவைச் சேர்ந்த காதல் ஜோடி, தங்களது திருமணத்திற்கு செல்லத் திட்டமிட்டிருந்த விமானம் ரத்தானதால், வேறொரு விமானத்தில் செல்லும் வழியில் நடுவானிலேயே திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
பணிப்பெண் ஒருவரே மணப்பெண் தோழி ஆக, பயணம் செய்த புகைப்பட கலைஞர் ஒருவர், புகைப்படங்கள் என என விமானம் பறந்து கொண்டிருக்கும்போதே, திருமணம் நடைபெற்றுள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடி... கை கொடுத்த கேப்டன்...முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம்
நடுவானில் நடைபெற்ற திருமணம் குறித்து விமான நிறுவனம் சமூக வலைதளங்களில் பதிவு செய்த புகைப்படம் தீயாகப் பரவி வருகிறது.

அமெரிக்க காதல் ஜோடி
அமெரிக்காவின் ஒக்லஹாமாவைச் சேர்ந்த பேம் பேட்டர்சன், ஜெரேமி சால்டா ஆகியோர் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தனர். லாஸ் வேகாஸ் தேவாலயம் ஒன்றில் இவர்களின் திருணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பேட்டர்சன் - ஜெரேமி இருவரும் லாஸ் வேகாஸ் நகருக்கு திருமணம் செய்து விமானத்தில் செல்ல திட்டமிட்டு, முன்கூட்டியே விமான பயணச் சீட்டுக்களை எடுத்துள்ளனர். ஒக்லஹாமாவில் இருந்து விமானத்தில் டல்லாஸ் போர்ட் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தனர்.

விமானம் திடீர் ரத்து
டல்லாஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லாஸ் வேகாஸ் புறப்படவேண்டிய விமானம் பலமுறை தாமதமாகி, இறுதியில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதைக்கேட்டதும், திருமணத்திற்கு சரியான நேரத்தில் செல்ல முடியாது என பேட்டர்சன் - ஜெரேமி ஜோடி கவலையடைந்துள்ளனர். அப்போதுதான், அவர்களது சிக்கலைத் தீர்க்க ஒருவர் முன்வந்துள்ளார்.

உதவிய சக பயணி
ஒக்லஹோமாவில் இருந்து டல்லாஸ் வந்த விமானத்தில் இவர்களுடன் பயணம் செய்த க்றிஸ் என்பவர், இவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டதை அறிந்து, அவர்கள் சரியான நேரத்தில் திருமணம் செய்ய உதவுவதாக அவர்களிடம் உறுதி அளித்துள்ளார்.
அதன்படி மூவரும் அங்கிருந்து லாஸ் வேகாஸிற்கு செல்லும் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்யத் தயாராகியுள்ளனர். திருமண உடை அணிந்தபடி விமானத்தில் ஏறிய ஜெரேமியிடம் விமானி இதுகுறித்து விசாரித்துள்ளார்.

நடுவானில் திருமணம்
அதற்கு அவர், விமானத்திலேயே திருமணம் செய்துகொள்ளப் போதவாக பதிலளித்துள்ளார். உடனே விமானியும், அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, நடுவானில் விமானம் பறந்துகொண்டிருக்கும்போதே இந்த ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது.
விமான ஊழியர்கள் உதவ, பணிப்பெண் ஒருவரே மணப்பெண் தோழி ஆக, அந்த விமானத்தில் பயணம் செய்த புகைப்பட கலைஞர், திருமண புகைப்படங்களை 'க்ளிக்' செய்ய என விமானம் பறந்து கொண்டிருக்கும் போதே, கொண்டாட்டத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த திருமண புகைப்படங்களை பதிவிட்டுள்ளது. அந்தக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகின்றன.