For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடைசி 10 நிமிடத்தில் எல்லாம் மாறியது.. பாக். விமான விபத்து எப்படி நடந்தது?.. சிக்கிய பிளாக் பாக்ஸ்!

பாகிஸ்தான் விமான விபத்து எப்படி நடந்தது, எதனால் விழுந்து நொறுங்கியது என்பது தொடர்பான விவரங்கள் தற்போது விவரங்கள் வெளியாகி வருகிறது.

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் விமான விபத்து எப்படி நடந்தது, எதனால் விழுந்து நொறுங்கியது என்பது தொடர்பான விவரங்கள் தற்போது விவரங்கள் வெளியாகி வருகிறது.

Recommended Video

    Pakistan flight incident video | விமானி பேசிய ஆடியோ... விபத்துக்கு முன் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சி

    பாகிஸ்தானில் விமான விபத்தில் 97 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நடந்த இந்த விபத்து உலகையே உலுக்கி உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த பிகே -8303 என்ற விமானம் விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

    ஏர்பஸ் ஏ 320 என்ற விமானம் ஆகும் இது. இந்த விமானம் லாகூரில் இருந்து நேற்று மதியம் 1 மணிக்கு புறப்பட்டு உள்ளது. 3 மணிக்கு அந்த விமானம் கராச்சியில் தரையிறங்க செல்லும் போது விழுந்து நொறுங்கி உள்ளது. இதில் 99 பேர் பயணம் செய்தனர்.

     "ஒரே நெருப்பு.. மரண ஓலம்.. கொஞ்சமா வெளிச்சம் தெரிஞ்சது".. கராச்சி விபத்தில் தப்பியவர் பதைபதை பேட்டி!

    விசாரணை நடக்கிறது

    விசாரணை நடக்கிறது

    இந்த நிலையில் இந்த விபத்து குறித்து தற்போது தீவிரமான விசாரணைகள் நடந்து வருகிறது. இந்த விபத்து நடக்கும் முன் விமானி பேசிய ஆடியோ ஒன்று இன்று காலையில்தான் வெளியானது. அதேபோல் விமானம் எப்படி கீழே விழுந்து நொறுங்கியது என்பது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியானது. இந்த நிலையில் புதிய திருப்பமாக இந்த விபத்து குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கோளாறு காரணம்

    கோளாறு காரணம்

    அதன்படி இந்த விமானத்தில் கோளாறு இருப்பது கடைசி 10 நிமிடம் முன்பு விமானிக்கு தெரியவில்லை என்கிறார்கள். அதாவது விமானி இரண்டு முறை விமானத்தை தரையிறக்க முயன்று உள்ளார். அப்போது தரையிறக்க முடியவில்லை. இதில் இரண்டாவது முறை விமானத்தை தரையிறக்க முயன்ற போதுதான், விமானத்தில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற தகவல்

    கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற தகவல்

    விமானத்தில் தொழில்நுட்ப ரீதியான கோளாறு இருக்கிறது என்று விமானி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அதன்படி விமானம் விழுந்து சிதறுவதற்கு 10 நிமிடத்திற்கு முன்தான் அதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது உள்ளது. அதுவரை விமானம் சரியாக சென்று இருக்கிறது. விமானம் பறந்த போது அதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறுகிறார்கள்.

    பிளாக் பாக்ஸ்

    பிளாக் பாக்ஸ்

    இரண்டாவது முறை விமானத்தை தரையிறக்க முயன்ற போதுதான் விமானம் கீழே விழுந்து நொறுங்கி உள்ளது. இந்த நிலையில் விபத்து நடந்த பகுதியில் நடந்த சோதனையில், தற்போது விமானத்தின் பிளாக் பாக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது சோதனைகள் நடந்து வருகிறது. இதில் விபத்துக்கான காரணம் என்ன என்று விவரங்கள் பதிவாகி இருக்கும். இதை வைத்து விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியும்.

    அதிக காலம் எடுத்துள்ளது

    அதிக காலம் எடுத்துள்ளது

    விபத்துக்கான காரணத்தை மிக எளிதாக இதனால் கண்டுபிடிக்க முடியும். இது தொடர்பாக தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்துக்கு இன்னொரு காரணமும் இருக்கும் என்று கூறுகிறார்கள். அதன்படி இந்த விமானம் கடந்த 2004ல் இருந்து பறந்து கொண்டு இருக்கிறது. இது மிக அதிக காலம் ஆகும். அதேபோல் 47100 நிமிடங்கள் இந்த விமானம் பறந்துள்ளது. அதனால் கண்டிப்பாக இந்த விமானத்தில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம்.

    லாக்டவுன் காரணம்

    லாக்டவுன் காரணம்

    அதேபோல் பாகிஸ்தானில் லாக்டவுன் நேரத்தில் இந்த விமானம் சரியாக பராமரிக்கப்படவில்லை. பெரிய அளவில் உட்பாகம் எதுவும் சர்வீஸ் செய்யப்படவில்லை. இதனால் விமானம் பழுதடைந்து இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். கடந்த வாரம்தான் அங்கு விமான போக்குவரத்து தொடங்கியது. இந்த நிலையில்தான் தற்போது அங்கு விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    English summary
    Low maintenance and Quarantined effect: The black box may reveal about Pakistan Plane Crash soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X