For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1 பெட்ரூம் மாத வாடகை ரூ.2,27,000..2 ஜீன்ஸ் ரூ.15,600. வாய் பிளக்க வைக்கும் இந்த விலை எங்கு தெரியுமா?

Google Oneindia Tamil News

நியூயார்க் : உலகில் அதிக செலாகும் நகரம் எது என்று கேட்டல் நியூயார்க் அல்லது லண்டன் என்பது நமக்கு தோன்றும். ஆனால் உலகிலேயே அதிக செலவாகும் நகரம் அங்கோலா நாட்டில் உள்ள லுவாண்டா தான். அண்மையில் இசிஏ இன்டர்நேஷனல் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.

ஆப்ரிக்காவில் ஜாம்பியா, போட்ஸ்வானா அருகே அட்லாண்டிக் கடல் ஓரத்தில் அமைந்துள்ள நாடு அங்கோலா.

luanda

ஒரு காலத்தில் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த போர்ச்சுக்கிசீயர்கள் உருவாக்கியது தான் லுவாண்டா நகரம். அங்கோலாவில் ஏராளமான பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டதும், லுவாண்டா அதிவளர்ச்சி அடைந்தது. இதனால் அங்கு வசிப்போரின் செலவினங்களும் அதிகரித்துள்ளளன.

இங்கு ஒரு படுக்கையறை கொண்ட வீட்டின் ஒரு மாத வாடகை குறைந்தபட்சம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும். ஒரு ஜோடி சாதாரண ஜீன்ஸ் பேன்ட் வாங்க வேண்டுமானால் 15 ஆயிரத்து 600 ரூபாய் செலவழிக்க வேண்டும். இதற்கே இவ்வளவு என்றால் மற்ற விஷயங்களுக்கு எவ்வளவு செலவாகும் என கணக்கிட்டுக்கொள்ளலாம்.

மற்ற நகரங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்..

1. லுவாண்டா (அங்கோலா)
2. ஹாங்காங் (சீனா)
3.ஜூரிச் (சுவிட்சர்லாந்து)
4.சிங்கப்பூர்
5.ஜெனீவா (சுவிட்சர்லாந்து)
6.ஷாங்காய் (சீனா)
7.பெய்ஜிங் (சீனா)
8.சியோல் (தென் கொரியா)
9.பெர்ன் (சுவிட்சர்லாந்து)
10.என்ஜமீனா (சாட்)

உலகின் பணக்கார நாடு என கூறப்படும் அமெரிக்காவின் ஒரு நகரம் கூட இப்பட்டியலில் இடம்பெறவில்லை என்பது இன்னொரு ஆச்சரியமான தகவல்.

English summary
Mercer's annual Cost of Living survey places Luanda, Angola, as the most expensive city for expatriate employees, where a one-bedroom apartment in the city centre can set you back $3,500 per month, and a pair of jeans could reportedly cost you more than $240.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X