For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: ஈராக்கில் பயணிகள் விமான சேவை கடும் பாதிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெர்லின்: வடக்கு ஈராக் பகுதிக்கு விமான சேவையை நிறுத்தியுள்ளதாக ஜெர்மனியின் முன்னணி விமான சேவை நிறுவனமான லுப்தான்ஸா அறிவித்துள்ளது.

பிரான்க்பர்ட் நகரில் இருந்து ஈராக்கின் எர்பில் நகருக்கு வாரத்தில் இரு நாட்கள் இயக்கிய லுப்தான்ஸா விமானமும், வியன்னாவில் இருந்து எர்பில் நகருக்கு தினசரி இயக்கப்பட்ட ஆஸ்திரேலிய ஏர்லைன்ஸ் விமானமும் தற்காலிகமாக தங்கள் இயக்கத்தை நிறுத்தியுள்ளன.

ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க விமானப்படை இரு நாட்களுக்கு முன்பிருந்து தாக்குதலை ஆரம்பித்துள்ளது. குர்திஷ் வீரர்களை காக்க அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Lufthansa reroutes flights to avoid Iraqi airspace

இத்தாக்குதல் வடக்கு ஈராக் பகுதியில்தான் அதி தீவிரமாக நடந்து வருகிறது. எனவே அந்த பகுதியின் வான் எல்லையை கடந்து விமானங்கள் பறப்பது அவற்றின் பாதுகாப்புக்கு குந்தகமாக முடிந்துவிடும் என்று விமான போக்குவரத்து நிறுவனங்கள் அச்சமடைந்துள்ளன.

லுப்தான்ஸா நிறுவனம் ஈராக்கில் எர்பில் நகருக்கு மட்டுமே விமானச்சேவையை அளித்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை முதல் அதையும் நிறுத்திவிட்டது.

English summary
German airline Lufthansa has said that the suspension of its flights to the northern Iraqi city of Erbil will continue due to security reasons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X