For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெனிவா மனித உரிமை மாநாட்டில் பேசும் மு.க ஸ்டாலின்.. அழைப்பு விடுத்த ஐநா.. பெரும் எதிர்பார்ப்பு!

ஜெனிவாவில் நடக்கும் ஐநா மனித உரிமை மாநாட்டில் கலந்து கொள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    M K Stalin to speak at UNO Human Rights Council meeting in Geneva

    ஜெனிவா: ஜெனிவாவில் நடக்கும் ஐநா மனித உரிமை மாநாட்டில் கலந்து கொள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அடுத்த வாரம் நடக்கும் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச இருக்கிறார்.

    ஜெனிவாவில் இருக்கும் ஐநா சபையில் எல்லாம் மாதமும் முக்கியமான நிகழ்வுகளும் கூட்டங்களும் நடப்பது வழக்கம். குழந்தைகள் பாதுகாப்பு, பெண்கள் நலன், அகதிகள் முன்னேற்றம் தொடங்கி பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை கூட்டங்கள் நடக்கும்.

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த கூட்டத்தில் பலமுறை கலந்து இருக்கிறார். பலமுறை வைகோ இதில் இலங்கை பிரச்சனை குறித்தும் போர் குறித்தும் பேசியுள்ளார்.

    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    இந்த நிலையில் ஜெனிவாவில் நடக்கும் ஐநா மனித உரிமை மாநாட்டில் கலந்து கொள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடக்கிறது. இது ஐநாவின் 42வது மனித உரிமைகள் மாநாடு ஆகும்.

    ஏன்

    ஏன்

    உலகம் முழுக்க மனித உரிமைக்காக போராடும் முக்கிய தலைவர்கள் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். பல்வேறு போராளிகள், அரசியல் தலைவர்கள் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டு உள்ளனர். அதன் ஒரு பகுதியாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலினும் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த லோக்சபா தேர்தலில் வென்றதில் இருந்தே நாடு முழுக்க அறியப்படுகிறார். காஷ்மீர் பிரச்சனையில் ஸ்டாலின் எடுத்த நிலைப்பாடு நாடு முழுக்க பெரிய அளவில் கவனம் பெற்றது. இந்த நிலையில்தான் அவருக்கு தற்போது ஐநா மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    என்ன பேசுவார்

    என்ன பேசுவார்

    இதனால் அடுத்த வாரம் நடக்கும் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச இருக்கிறார். பெரும்பாலும் திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய பாஜக அரசு குறித்தும், அரசின் நடவடிக்கை குறித்தும் பேசுவார் என்று கூறப்படுகிறது. அதேபோல் இவர் காஷ்மீர் பிரச்சனை குறித்தும், ஈழத்தை சேர்ந்த தமிழ் அகதிகள் குறித்து, தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்தும் அவர் பேசுவார் என்கிறார்கள்.

    English summary
    DMK chief M K Stalin to speak at UNO Human Rights Council meeting in Geneva.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X