For Daily Alerts
Just In
சிலியில் சூரிய கிரகணத்தின் போது சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- கட்டிடங்கள் சரிந்தன
சான்டியாகோ: சிலி நாட்டில் சூரிய கிரகணத்தின் போது சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் இது 6.1 அலகுகளாக பதிவாகி இருந்தது.
சிலி, அர்ஜென்டினாவில் இன்று இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் பார்க்க முடிந்தது. அதேநேரத்தில் சிலியின் காலாமா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கலாமா நகரில் இருந்து 67 கி.மீ தொலைவில் சிலி-பொலிவியா எல்லையில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கமானது ரிக்டரில் 6.1 அலகுகளாக பதிவாகி இருந்தது.
2020-ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்- சிலி, அர்ஜென்டினாவில் பார்க்க முடிந்தது!
இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.