For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெத்த மகளையே பலாத்காரம் செய்திருக்கிறாய்: ஏலத்திற்கு வரும் காந்தி மகனுக்கு எழுதிய கடிதம்

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: மகாத்மா காந்தி தனது மூத்த மகன் ஹரிலால் அவரது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டி எழுதிய கடிதம் லண்டனில் ஏலத்திற்கு வருகிறது.

இங்கிலாந்தில் உள்ள ஏல நிறுவனமான முல்லக்ஸ் ஆக்ஷனீர்ஸ் மகாத்மா காந்தி குஜராத்தியில் எழுதிய மூன்று கடிதங்களை ஏலத்தில் விடுகிறது. இந்த கடிதங்கள் 1935ம் ஆண்டு ஜுன் மாதம் எழுதப்பட்டவை.

இந்த கடிதங்கள் ரூ. 99 லட்சத்து 90 ஆயிரத்து 81க்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீ தான்

நீ தான்

காந்தி தனது மூத்த மகனான ஹரிலாலுக்கு எழுதிய கடிதத்தில், நம் நாட்டு விடுதலையை விட உன் பிரச்சனை தான் எனக்கு மிகவும் கடினமாக உள்ளது என்பது உனக்கு தெரிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பலாத்காரம்

பலாத்காரம்

மனு உன்னை பற்றி பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை என்னிடம் தெரிவித்துள்ளார். நீ அவரை 8 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். அப்போது அவர் படுகாயம் அடைந்ததால் சிகிச்சை எடுக்க வேண்டி இருந்திருக்கிறது. (மனு ஹரிலாலின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது)

இறந்துவிடு

இறந்துவிடு

ஹரிலாலுக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில் காந்தி கூறியிருப்பதாவது, நீ இன்னும் மது, போதை, செக்ஸ் ஆகியவற்றுக்கு அடிமையாக உள்ளாயா என்பது குறித்து தயவு செய்து என்னிடம் உண்மையை கூறு. மதுவுக்கு அடிமையாவதை விட நீ இறந்துவிடுவதையே நான் விரும்புகிறேன்.

கடிதங்கள்

கடிதங்கள்

காந்தி எழுதிய இந்த கடிதங்கள் இதுவரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படாதவை. இந்த கடிதங்கள் மூலம் காந்திக்கும், அவரது மகனுக்கும் இடையே இருந்த பிரச்சனையான உறவு வெளிச்சத்திற்கு வரும்.

ஏலம்

ஏலம்

காந்தி எழுதிய 3 கடிதங்கள் வரும் 22ம் தேதி ஏலத்தில் வருகிறது. இதற்கு முன்பு காந்திக்கு சொந்தமான 50 பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A British auction house is putting on sale three letters written by Mahatma Gandhi to his eldest son Harilal aacusing him of sexaully assaulting his own daughter Manu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X