For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துருக்கியில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து.. 10 பேர் பலி, 80 பேர் படுகாயம்

துருக்கியில் பயணிகள் ரயில் தடுப்புரண்டு விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

அங்காரா: துருக்கியில் பயணிகள் ரயில் தடுப்புரண்டு விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதில் 10 பேர் பலியாகி உள்ளனர்.

துருக்கியின் பிகுலே பகுதியிலிருந்து இஸ்தான்புல் நகரத்திற்கு இந்த ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த நாட்டில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிக அளவில் மழை பெய்து வந்தது. இதனால் சில இடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது.

Major Train accident in Turkey: 10 people died, More than 80 people injured

இந்த நிலையில் இஸ்தான்புல் நகரத்திற்கு சென்ற அந்த ரயில் விபத்துக்குள்ளாகி உள்ளது. மொத்தம் 360 பேர் அந்த ரயிலில் பயணித்தனர். இந்த விபத்து காரணமாக 10 பேர் பலியாகி உள்ளனர். 80 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நிறைய பேர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். பலர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்னும் நிறைய பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது

மழை, மண் சரிவு காரணமாக ரயில் தடம் புரண்டது என்று கூறப்படுகிறது. அங்கு தற்போது மீட்பு பணி நடைபெற்றுவருகிறது. 100 க்கும் அதிகமான ஆம்புலன்ஸ், மீட்பு குழுவினர் அங்கு கூடியுள்ளனர்.

English summary
Major Train accident happened in Turkey due to heavy rain. 10 people died, More than 80 people injured.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X