For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்காக ஆங் சான் சூ சி பேசவேண்டும்: மலாலா

By BBC News தமிழ்
|
மலாலா
Reuters
மலாலா

மியான்மரில் ஏற்பட்டுவரும் வன்முறையால் அந்த நாட்டில் இருந்து பல்லாயிரக் கணக்கில் அகதிகளாக வெளியேறும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்காக அந்நாட்டுத் தலைவர் ஆங் சான் சூ சி பேசவேண்டும் என்று பெண் கல்வி உரிமைக்குக் குரல் கொடுத்துப் புகழ் பெற்ற மலாலா யூசுஃப்சாய் கோரியுள்ளார்.

மலாலா அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். அவர் கோரிக்கை வைத்திருக்கிற ஆங் சான் சூ சி-யும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.

முன்னவர் கல்வி உரிமைக்குக் குரல் கொடுத்துப் புகழ் பெற்றதைப் போல, சர்வாதிகார அரசை எதிர்த்துக் குரல் கொடுத்துப் புகழ் பெற்றவர் ஆங் சான் சூ சி.

ரோஹிங்கியாக்களைப் பாதுகாக்க சர்வதேச சமூகம் தலையிடவேண்டும் என்றும் மலாலா பேசியுள்ளார்.

இடம்பெயர்ந்திருக்கிற மக்களின் எண்ணிக்கை பல நூறாயிரம். எனவே நாம் அமைதிகாக்க முடியாது என்று அவர் பிபிசி செய்தியாளரிடம் கூறினார்.

"நமது குடியுரிமையும், சொந்த நாட்டில் வாழும் உரிமையும் மறுக்கப்படும் சூழ்நிலையைப் பற்றி நம்மால் ஒரு நொடி கூட நினைத்துப் பார்க்க முடியாது.

மக்கள் வன்முறையைச் சந்திக்கின்றனர். இது மனித உரிமைப் பிரச்சினை. குழந்தைகளுக்குக் கல்வி மறுக்கப்படுகிறது.

அவர்களது அடிப்படை உரிமையை அவர்கள் பெற முடியவில்லை. இதில் அரசு தலையிடவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்" என்று அவர் கூறியுள்ளார்.

தற்போது 20 வயதாகும் மலாலா விரைவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர இருக்கறார்.

அந்தப் பல்கலைக்கழகத்தில் படித்த பலர் நோபல் பரிசு பெற்றிருக்கலாம்.

நோபல் பரிசு பெற்ற பிறகு அந்தப் பல்கலைக்கழகத்தில் சேரவிருக்கும் வித்தியாசமான மாணவர் மலாலா.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
Nobel Peace Prize winner Malala Yousafzai says the "global community" needs to intervene to protect Myanmar's Muslim minority.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X