For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விமானத்திற்குள் அழுத்தம்... பயணிகள் அவதி - அவசரமாக தரையிறங்கியது மலேசிய விமானம்

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் இருந்து டோக்கியோ புறப்பட்ட மலேசிய விமானத்தின் உள்ளே சீரற்ற அழுத்தம் நிலவியதால் அதில் பயணம் மேற்கொண்ட பயணிகள் பெரும் அவதியடைந்தனர். இதனால் மீண்டும் அந்த விமானம் கோலாலம்பூர் திரும்பியது.

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் ஒன்று, இன்று காலை கோலாலம்பூரிலிருந்து டோக்கியோவிற்கு பறக்க துவங்கியது. 50 நிமிடங்கள் கழிந்த பின்னரும் விமானத்தின் உள்ளே பராமரிக்கப்படவேண்டிய அழுத்தத்தினை சீராகப் பராமரிக்க முடியாததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.

Malaysia Airlines plane forced to return to Kuala Lumpur after cabin pressure problems

இதனைத் தொடர்ந்து அந்த விமானம் மீண்டும் கோலாலம்பூர் திரும்பியது. பின்னர் மற்றொரு விமானத்தின் மூலம் தங்களது பயணத்தைத் தொடர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக மலேசிய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை இயக்குனர் அசாருதின் அப்துல் ரஹ்மான் கூறுகையில், ‘விமானத்தினுள் பயணிகளின் வசதிக்கேற்ற அழுத்தத்தைப் பராமரிக்க இயலவில்லை. ஆனால் இது பெரிய பிரச்சினை அல்ல' எனத் தெரிவித்தார்.

ஆனால் இது பற்றி விமான நிறுவனத்தினரின் தகவலை அறியமுடியவில்லை என்று கூறப்படுகின்றது. இந்த விமானப்பயணிகள் அனைவரும்

சமீபத்தில் நடந்த இரண்டு விபத்துகளால் 537 பயணிகளின் உயிரைக் குடித்து உலக நாடுகளின் கவனத்திற்கு உள்ளான மலேசிய விமானம், விரைவில் தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது குறிப்பிடப்பட்டது.

English summary
The head of Malaysia's civil aviation department has confirmed reports that a Malaysia Airlines plane was forced to turn back due to pressure problems.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X