For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ஜின் கோளாறு: 300 பயணிகளுடன் மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் ஆஸி.யில் அவசரமாக தரையிறக்கம்!!

By Mathi
Google Oneindia Tamil News

மெல்போர்ன்: மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.ஹெச்.148 ரக விமானம் என்ஜின் கோளாறால் 300 பயணிகளுடன் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா தலைநகர் மெல்போர்னில் இருந்து மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.ஹெச்.148 ரக விமானம் மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது. புறப்பட்ட சென்ற சில நிமிடங்களிலே விமானத்தில் பிரச்சனை கண்டறியப்பட்டது.

Malaysia Airlines plane makes Melbourne emergency landing

உடனடியாக விமானம் அவசர, அவசரமாக மெல்போர்னிலேயே தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த சுமார் 300 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு இருபெரும் விபத்துக்களை சந்தித்தது. மார்ச் மாதம் சுமார் 230 பயணிகளுடன் மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்.எச்.370 ரக போயிங் ரக விமானம் மாயமானது. விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்தது என்று கூறப்பட்டது.

ஆனால் விமானம் என்ன ஆனது என்பது தொடர்பாக எந்தஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரையில் வெளியாகவில்லை. இருப்பினும் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள் சிக்கி அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்று மலேசியா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் நான்கு மாதங்களுக்கு பின்னர் உக்ரைன் எல்லையில் மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் எம்.ஹெச்.17 சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 298 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A Malaysia Airlines passenger plane has made an emergency landing in Melbourne, Australia after reporting a possible engine fire.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X