For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மலேசியாவில் தேர்தல்: பிரதமர் நஜீப் ரசாக்கை வீழ்த்துவாரா 92 வயது மகாதீர்?

மலேசிய தேர்தலில் தற்போது பிரதமர் பதவியில் இருக்கும் நஜீப் ரசாக்கை எதிர்த்து போட்டியிடுகிறார் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசிய பொதுத் தேர்தலில் தற்போது அந்த பிரதமர் பதவியில் இருக்கும் நஜீப் ரசாக்கை எதிர்த்து 92 வயதாகும் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது களம் இறங்குவதால் பரபரப்பு கூடியுள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் மலேசிய பிரதமராக உள்ளவர் நஜீப் ரசாக். இவர் மீது மக்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர். விலைவாசி உயர்வு, அரசு நிதியில் பல பில்லியன் டாலர் முறைகேடு உள்ளிட்டவற்றால் பெரும் அதிருப்தியை சந்தித்துள்ளார் நஜீப்.

Malaysia elections on May 9: Can Mahathir topple Razak?

இந்நிலையில் மலேசிய தேர்தல் வரும் மே 9 -ஆம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. ரசாக்கிற்கு முக்கிய சவாலாக இருப்பது அவரை எதிர்த்து போட்டியிடவுள்ள 92 வயதான மகாதீர் முகமது ஆவார்.

மகாதீர் முகமது கடந்த 1981-ஆம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர். நீண்ட காலம் பிரதமராக இருந்த இவர் பின்னர் ஓய்வு பெற்றார். தற்போது முழு வீச்சில் மீண்டும் களம் இறங்கியுள்ளார். தனது மக்கள் நீதி கட்சியின் கீழ் போட்டியிடுகிறார்.

மே 9-ஆம் தேதி 1.5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இவர்களில் 10.7 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள். இவர்களது வாக்கு யாருக்கு கிடைக்கும் என்பது அங்கு பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Malaysia’s ruling coalition Barisan Nasional (BN) will be facing a tough challenge to its 61-year hold on power on May 9 when the country goes to general elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X