For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எம்.ஹெச்.17 சுட்டு வீழ்த்தப்பட்டதன் முதலாண்டு நினைவு தினம் - அஞ்சலி செலுத்திய மலேசியா

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் தேதியன்று மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.17 உக்ரைனில் அரசாங்க எதிர்ப்பு கிளர்ச்சிக்காரர்கள் ஆதிக்கத்தில் உள்ள பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டு விழுந்து நொறுங்கியதன் ஒருவருட நினைவு தினத்தினை நினைவு கூர்ந்துள்ளது மலேசியா.

அவர்களுடைய குடும்பத்தினர் அனைவரும் இணைந்து ஒன்று கூடி இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.

Malaysia marks anniversary of fatal MH17 crash in Ukraine

நெதர்லாந்து நாட்டில் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதியன்று 15 விமான ஊழியர்கள் மற்றும் 283 பயணிகளுடன் பேருடன் மலேசியா நோக்கிச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் உடல் சிதறி பலியாகினர்.

இவ்விபத்தில் பலியானவர்களின் ஒரு வருட நினைவு தினம் வருகின்ற 17ம் தேதியன்று அனுசரிக்கப்படுகின்றது. இதனையடுத்து மலேசியாவில் ஒன்று கூடிய பயணிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அவர்களுக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய இரங்கலைத் தெரிவித்தார்.

English summary
Family and friends in Malaysia remember those lost when Malaysian airliner MH17 was shot down over Ukraine one year ago. Julie Noce reports.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X