For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறிய மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் நாடு கடத்தல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 3000க்கும் மேற்பட்டோர் நாடு கடத்தப்பட்டனர்.

மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறிய பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3,036 பேர் அவரவர் நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். நாடுகடத்தப்பட்டவர்கள் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பாகிஸ்தான், சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாகும். இது கடந்த இரு மாத கணக்கு.

Malaysia repatriates 3,036 illegal immigrants

இவ்வாறு கடந்த 1990 முதல் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மலேசியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பேசியுள்ள சாபா மாநிலத்தின் தேசிய பாதுகாப்பு சபையின் இயக்குனர் தட்டுக் ரொட்சி, "இதில் பிலிப்பைன்சைச் சேர்ந்த 2,556 பேர், இந்தோனேசியாவைச் சேர்ந்த 400 பேர், பாகிஸ்தான், சீனா, தென் கொரியாவைச் சேர்ந்தவர்களும் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்சை சேர்ந்த 691 பேர் படகில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

English summary
A total of 3,036 illegal immigrants, mostly Filipinos and Indonesians, have been sent back to their country of origin so far this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X