For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை தொடரும்- மலேசியா அரசு

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசியாவில் தமிழிழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உள்துறை துணை அமைச்சர் டாக்டர் இஸ்மாயில் முகமது சைட் தெரிவித்தார்.

மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. மலேசியாவின் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் விடுதலைப் புலிகள் இயக்கமும் உள்ளது.

Malaysia will retain LTTE on terror groups list

இதனால் மலேசியாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் மலேசியா நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை தொடருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

ரூ1,000 கோடி ஹவாலா, அன்னிய செலாவணி மோசடி- டெல்லியில் சீன நிறுவனங்களில் ஐடி அதிரடி ரெய்டுரூ1,000 கோடி ஹவாலா, அன்னிய செலாவணி மோசடி- டெல்லியில் சீன நிறுவனங்களில் ஐடி அதிரடி ரெய்டு

நாடாளுமன்றத்தில் பக்கத்தான் ஹராப்பான் எம்.பி வில்லியம் லியோங் ஜீ கீன், 2009-ல் புலிகள் இயக்கம் செயல் இழந்துவிட்ட பின்னரும் ஏன் தடை நீட்டிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் இஸ்மாயில் முகமது சைட், விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் உள்ளது.

பொது ஒழுங்கு, பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையையும் கைவிட முடியாது; ஆகையால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையையும் நீக்க முடியாது; அந்த தடை தொடரும் என்றார்.

English summary
Malaysia will retain the Liberation Tigers of Tamil Eelam in the county''s terror groups list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X