For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசிய பிரதமர் மீது ரூ.4,500 கோடி ஊழல் குற்றசாட்டு... அரசு நிதியை சொந்த கணக்குக்கு மாற்றி மோசடி..

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேஷிய பிரதமர் நஜீப் ரசாக் மீது இந்திய மதிப்பில் ரூ.4,500 கோடி ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஊழல் வழக்குடன் தொடர்புடைய 6 வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக விசாரனைக் குழு தெரிவித்துள்ளது.

அரசு நிதியில் இருந்து அவரது சொந்த வங்கி கணக்குகளுக்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,500 கோடி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

najib razak

இது தொடர்பாக பன்முக விசாரணை அமைப்புகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் இடம் பெறும் சிறப்பு விசாரணை குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த குழுவில் ஊழல் தடுப்பு ஆணையம், மத்திய வங்கி, போலீஸ் உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குற்றசாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஊழலில் ஈடுப்பட்ட முதல் மலேசிய பிரதமர் என்ற அவப்பெயருக்கு நஜீப் ரசாக் ஆளாவார். இதற்கிடையே இந்த ஊழல் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஆனால் இந்த ஊழல் குற்றச்சாட்டுகளை நஜீப் ரசாக் மறுத்துள்ளார்.

English summary
A task force investigating Malaysia's troubled state investment fund 1MDB says it has frozen six bank accounts report that nearly $US700 million had been transferred to an account owned by prime minister Najib Razak.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X