For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் பிரதமரான பிறகு முதல் வெளிநாட்டு பயணம்.. மாலத்தீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Modi in Maldives | மாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

    மாலே: அரசுமுறை பயணமாக மாலத்தீவுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    2 வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக நரேந்திர மோடி மாலத்தீவு சென்றுள்ளார் . மாலே விமான நிலையத்தில் மாலத்தீவு அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு பாரம்பரிய நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் இப்ராகீம் சோலி வரவேற்றார்.

    Maldives: Prime Minister Narendra Modi & President of Maldives Ibrahim Mohamed Solih hold a meeting in Male

    கடந்த ஆண்டு நவம்பரில் மாலத்தீவு அதிபர் இப்ராகீம் சோலி பதவி ஏற்பு விழாவுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். எனினும் அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்படவில்லை.

    தற்போது மேற்கொண்டுள்ள பயணத்தின் போது, இரு நாடுகளுக்கிடையே சில துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. மாலத்தீவில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு உதவுமாறு அந்நாட்டு அதிபர் சோலி கோரிக்கை வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கவும் இந்தியா உதவ உள்ளது.

    கேம் சேஞ்சரான ரோஜாவை புறக்கணித்த ஜெகன்மோகன் ரெட்டி.. ரோஜாவுக்கு கேம் சேஞ்சரான ரோஜாவை புறக்கணித்த ஜெகன்மோகன் ரெட்டி.. ரோஜாவுக்கு "பெத்த போஸ்ட் உந்தி"

    அதே நேரம், மாலத்தீவில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 10 ரேடார்களை இந்தியா அமைத்துள்ளது. இது மோடியின் தற்போதைய பயணத்தின் போது செயல்பாட்டிற்கு வர உள்ளது. இந்த ரேடார்கள், இந்திய பெருங்கடல் பகுதியில் சீன போர்கப்பல்களின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க பயன்படுத்தப்பட உள்ளது. பல ஆண்டுகளால மாலத்தீவில் இந்தியா அதிக அளவில் முதலீடு செய்து வருவதுடன், ராணுவ உதவிகள், பயிற்சிகள் மற்றும் திறமையான கட்டமைப்பு உதவிகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Maldives: Prime Minister Narendra Modi & President of Maldives Ibrahim Mohamed Solih hold a meeting in Male

    இதற்கிடையில் வெளிநாட்டு தலைவர்களுக்கு வழங்கப்படும் மாலத்தீவின் உயரிய விருதான நிஷான் இசூதீன் விருது, தற்போதைய பயணத்தின் போது மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    சமீபத்தில் மாலத்தீவில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக அங்கு சீனாவின் கை ஓங்கும் வகையில் இருந்தது. ஆனால், அங்கு நினைத்தப்படி இல்லாமல், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் மோடி அங்கு சென்றிருப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    மாலத்தீவு சுற்றுப் பயணத்துக்கு பின், பிரதமர் மோடி இலங்கை செல்கிறார். இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ந் தேதி நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இலங்கை செல்லும் முதல் வெளிநாட்டு தலைவர் பிரதமர் மோடி ஆவார்.

    English summary
    Maldives: Prime Minister Narendra Modi receives ceremonial welcome and guard of honour at Republic Square in Male; President of Maldives Ibrahim Mohamed Solih also present.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X