For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”எபோலா இல்லாத முதல் ஆப்ரிக்க நாடு மாலி” – அதிகாரபூர்வ அறிவிப்பு

Google Oneindia Tamil News

பமாக்கோ: ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், எபோலா நோய் கிருமி முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மாலியில் கடந்த 42 நாட்களாக எபோலா நோய் அறிகுறியுடன் எந்த நோயாளியும் வரவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Mali declared free of Ebola

இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் அவுஸ்மேன் கூறுகையில், எபோலாவை தடுக்கும் வழிமுறைகளில் வெற்றி பெற்றுள்ளதாகவும், எனவே மாலியை எபோலா இல்லாத நாடாக அறிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மாலியில் எபோலா நோய் கிருமி தாக்குதலுக்குள்ளான நோயாளி பூரண குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களில் மாலியில் 6 பேர் எபோலா நோய் தாக்குதலில் உயிரிழந்ததாக உலக சுகாதார மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Mali's government and the United Nations have declared the West African nation free of Ebola following a 42-day period without a new case of the deadly virus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X