For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாலியில் உச்சகட்ட மக்கள் கிளர்ச்சி- திடீர் புரட்சியில் ராணுவம் - அதிபர், பிரதமர் அதிரடியாக கைது!

Google Oneindia Tamil News

பமாகோ: மாலியில் ராணுவத்தினர் திடீர் புரட்சியில் ஈடுபட்டதை தொடர்ந்து அந்த நாட்டு அதிபர் இப்ராகிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான மாலியில் அந்நாட்டு அரசுக்கு தொடர் கிளர்ச்சிகள் நடைபெற்று வந்தன. மக்களின் தொடர் போராட்டங்களின் உச்சமாக ராணுவத்தினரும் கிளர்ச்சியில் இணைந்தனர்.

Mali president Ibrahim Boubacar Keita, PM Boubou Cisse held by mutinying soldiers

தலைநகர் பமாகோவில் டாங்கிகள், ஆயுதங்களுடன் ராணுவத்தினர் சுதந்திரமாக வலம் வந்தனர். நாட்டின் ராணுவ புரட்சி வெடித்ததாக கூறப்பட்ட நிலையில் ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் பவ்பவ் சிஸ்சே பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் இந்த பேச்சுவார்த்தை கை கொடுக்கவில்லை. ஒருகட்டத்தில் அதிபர் இப்ராகிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். இதனால் மாலியில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அபாயகரமான ஆலையை நிறுவ ஸ்டெர்லைட்டுக்கு அடிப்படை உரிமையே இல்லை- ஹைகோர்ட் தீர்ப்பு முழு விவரம் அபாயகரமான ஆலையை நிறுவ ஸ்டெர்லைட்டுக்கு அடிப்படை உரிமையே இல்லை- ஹைகோர்ட் தீர்ப்பு முழு விவரம்

இதனிடையே கைது செய்யப்பட்டுள்ள அதிபர், பிரதமரை உடனே ராணுவத்தினர் விடுதலை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி உள்ளது.

மேலும் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட நிலையில் அதிபர் இப்ராகிம் பவுபக்கர் கெய்டா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் வெளியாகி உள்ளன.

English summary
Malian President Ibrahim Boubacar Keita and Prime Minister Boubou Cisse have been detained by mutinying soldiers in Bamako.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X