For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசியாவில் ஜும்மா தொழுகை நடத்திய இமாமின் கன்னத்தில் அறைந்த இந்தியர்

By Siva
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் உள்ள தேசிய மசூதியில் ஜும்மா தொழுகை நடந்து கொண்டிருந்தபோது இந்தியர் ஒருவர் இமாமின் கன்னத்தில் அறைந்துள்ளார்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தேசிய மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் ஜும்மா தொழுகை நடைபெற்றது. அந்த தொழுகையில் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஷபிர் அகமது கான்(31) என்பவரும் கலந்து கொண்டார். இரண்டாவது வரிசையில் இருந்த அவர் திடீர் என்று முதல் வரிசைக்கு வந்து தொழுகை நடத்திக் கொண்டிருந்த இமாம் முகமது ஜுஹைரி பி முகமது யாதீம் அருகே சென்று அவர் பயன்படுத்திய மைக்கை பறிக்கப் பார்த்தார்.

Man assaults imam at National Mosque during Friday prayers

திடீர் என கான் இமாமின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு அவரது இடத்தில் நின்று தொழுகையை நடத்த முயன்றார். இதை பார்த்த பிறர் அதிரிச்சி அடைந்தனர். உடனே மசூதி காவலர்கள் ஓடி வந்து கானை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் கானை கைது செய்து அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் மனநம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவர் தனக்கு தானே பேசிக் கொள்கிறார். விசாரணையில் கான் போலீசாரிடம் கூறுகையில்,

தொழுது கொண்டிருக்கையில் இமாமின் இடத்தில் நீ நின்று தொழுகையை நடத்து என்று ஒரு குரல் கேட்டது. அதனால் தான் இமாமின் இடத்திற்கு சென்றேன் என தெரிவித்துள்ளார்.

English summary
A 31-year old Kashmiri man slapped an imam at national mosque in Kuala lumpur on friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X