For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெக்காவில் பெண்கள் உடை அணிந்து நடை போட்ட வாலிபர்... கைது

Google Oneindia Tamil News

துபாய்: சவுதி அரேபியாவின் புனித நகரமான மெக்காவில் உள்ள ஜாரனா மசூதியில் இஸ்லாமிய பெண்களின் பாரம்பரிய உடையான அபயாவை அணிந்து கொண்டு வலம் வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மசூதிக்கு வந்திருக்கும் பெண்களில் ஒருவர் அடிக்கடி கழிவறைக்கு செல்வதாகவும் விசித்திரமாக நடந்து கொள்வதாகவும் மசூதியில் உள்ள சிலர் போலீசில் புகாரளித்தனர்.

Man Dressed as Woman Arrested for Molestation in Saudi Arabia

இதையடுத்து அந்தப் பெண்ணைக் கண்காணித்த போலீசார் அவர் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சென்றதைக் கவனித்தனர்.

அவரை பின் தொடர்ந்து சென்ற போது அவர் தனது மேலங்கியை விடுவித்துக் கொண்டிருப்பதைக் கண்ட போலீசார் பெண் வேடத்தில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞரைக் கைது செய்தனர்.

அவர் மீது பாலியல் தொந்தரவு வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
A man, who disguised as a woman by wearing the traditonal 'abaya', has been arrested for allegedly molesting women at a mosque in Saudi Arabia's Mecca.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X