தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணி.. கடைசி விநாடியில் கை தூக்கி காப்பாற்றிய ஊழியர்.. பரபர வீடியோ
ஓக்லாண்ட் : கலிபோர்னியாவின் பிசியான ஓக்லாண்ட் ரயில்நிலையத்தில் தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணி ஒருவரை, ரயில்நிலையத்தின் போக்குவரத்து மேற்பார்வையாளர் காப்பாற்றிய சம்பவம் வைரலாகியுள்ளது.
ரயில் வேகமாக வந்துக் கொண்டிருந்தபோது, தண்டவாளத்தில் பயணி ஒருவர் தவறி விழுந்த நிலையில், யோசிக்கக்கூட நேரமில்லாத அந்த சூழலில் உடனடியாக அவரை அந்த ஊழியர் காப்பாற்றினார்.
இதையடுத்து பயணியும், மேற்பார்வையாளரும் சந்தோஷத்துடன் கட்டித்தழுவிக் கொண்ட சம்பவத்தை சக பயணி ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சவப்பெட்டிக்குள் 10 நிமிடம்.. வாழும்போதே மரண அனுபவம்.. திகிலடிக்க வைக்கும் தென் கொரியர்கள்!

காப்பாற்றிய ஊழியர்
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஓக்லாண்டில் நடைபெற்ற கால்பந்தாட்டத்தை கண்டுகளித்துவிட்டு, ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணி ஒருவர், தண்டவாளத்தில் தவறி விழுந்தார். அவரை உடனடியாக ரயில்வே ஊழியர் காப்பாற்றிய சம்பவம் வைரலாகியுள்ளது.

சமயோசிதமான ஊழியர்
ரயில் வேகமாக வந்துக் கொண்டிருந்தபோது, அந்த பயணி கால்தவறி தண்டவாளத்தில் விழுந்தார். ஸ்டேஷனில் பயணிகளை முறைப்படுத்திக் கொண்டிருந்த போக்குவரத்து ஊழியர், உடனடியாக பயணியின் கையை பிடித்து இழுத்து காப்பாற்றினார்.

வீடியோ வெளியீடு
பயணி காப்பாற்றப்பட்ட இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட நிலையில், இது தற்போது வைரலாகியுள்ளது.

ஊழியருக்கு நன்றி
தன்னை உயிருடன் மீட்ட ஊழியரை கட்டியணைத்து, காப்பாற்றப்பட்ட அந்த பயணி நன்றி தெரிவித்துக் கொண்டார். உணர்வுபூர்வமான இந்த நிகழ்வை அங்கிருந்த சக பயணி ஒருவர் தனது, செல்போனில் காட்சிப்படுத்தி, டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.