For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னதான்யா நடக்குது கேஎப்சியில?: முதலில் கோழி கக்கா, இப்போ...

By Siva
Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நிக்கோலஸ் என்பவர் கேஎப்சியில் சாப்பிட சென்று கோழிக்கறிக்கு பதில் அதில் வெந்தும், வேகாமலும் நுரையீரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

ஆஸ்திரேலியாவின் க்வீன்லேண்ட் பகுதியைச் சேர்ந்தவர் நிக்கோலஸ்(30). ஐடி நிபுணர். அவர் லேப்ரடார் பகுதியில் உள்ள கேஎப்சி உணவகத்திற்கு சென்று சிக்கன் விங்ஸ் மற்றும் பிரஸ்ட் உணவை ஆர்டர் செய்துள்ளார்.

தனக்கு அளிக்கப்பட்ட கோழிக்கறி துண்டை எடுத்து கடித்த வேகத்தில் தூத் தூ என்று துப்பிவிட்டார். பார்த்தால் கோழிக்கறிக்கு பதில் ஏதோ நசநசவென வெந்தும், வேகாமலும் இருந்ததை பார்த்து அவருக்கு குமட்டிக் கொண்டு வந்துவிட்டது.

நுரையீரல்

நுரையீரல்

கோழிக்கறிக்கு பதில் என்னமோ இருக்கிறது பாருங்கள் என்று அவர் கடை நிர்வாகத்தினரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர்களோ சமைக்கும் வேகத்தில் கோழியின் சிறுநீரகம், நுரையீரல் அகற்றப்படாமல் இருந்திருக்கும். இதை பார்த்தால் நுரையீரல் போன்று உள்ளது. தவறுதலாக வந்துவிட்டது சார் என்று தெரிவித்துள்ளனர்.

மாட்டேனே

மாட்டேனே

கேஎப்சியில் சாப்பிட்டது எல்லாம் போதும். இனி ஜென்மத்திற்கும் அந்த உணவகத்தில் சாப்பிடவே மாட்டேன் என்று நிக்கோலஸ் தெரிவித்துள்ளார்.

கோழிக் கழிவு

கோழிக் கழிவு

முன்னதாக இங்கிலாந்தில் உள்ள வெல்லிங்போரோவில் இளம்பெண் ஒருவர் கேஎப்சி உணவகத்தில் சாப்பிடுகையில் கோழிக்கறியின் இடையே கழிவு இருந்ததை கண்டுபிடித்தார்.

பூச்சி முட்டை

பூச்சி முட்டை

நியூசிலாந்தில் உள்ள புகேகோஹே பகுதியைச் சேர்ந்த சாரா ஜேன் வில்லியம்ஸ் என்பவர் கேஎப்சியில் ஜிங்கர் உணவு வாங்கி சாப்பிடுகையில் கறியில் பூச்சி முட்டைகளும், முட்டை பொறித்து நெளிந்த புழுக்களும் இருந்தன.

English summary
A 30-year old man found intact lung in his KFC three piece meal in Australia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X