For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவில் தன் குழந்தைக்கு தானே சித்தப்பாவான அப்பா - எப்டினு கேட்கறீங்களா?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் இறந்துபோன இரட்டை குழந்தைகளில் ஒருவரின் விந்தணு மூலமாக மற்றொருவருக்கு குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு அமெரிக்க தம்பதி இரண்டாவது குழந்தைக்காக சிகிச்சை செய்த போது கணவனின் விந்தணுவை மனைவிக்கு செலுத்தி கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றனர்.

அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தையின் ரத்தப் பிரிவு ஏபி பாசிடிவ். பெற்றோர் இருவருமே ஏ நெகடிவ் ரத்தப் பிரிவை சேர்ந்தவர்கள்.

Man Finds That His Son Is Carrying His Dead Twin's DNA

மருத்துவமனை மீது புகார்:

இது எப்படி சாத்தியம் என்றும், விந்தணுவை சேமித்ததில் ஏதோ குளறுபடி நேர்ந்துவிட்டதாகவும் தம்பதியர் மருத்துவமனை மீது புகார் கொடுக்க விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

சேமிப்பில் குளறுபடி இல்லை:

இந்த விசாரணையின் முடிவில் வெளியான தகவல்கள் மிகவும் விநோதமாக இருந்தது. அதாவது, விந்தணு சேமித்ததில் எந்த குளறுபடியும் நேரவில்லை.

அப்பாவுக்கு இரண்டு மரபணுக்கள்:

அதாவது விந்தணு கொடுத்த தந்தையின் மரபணுவை சோதித்த போது அவர் இரண்டு விதமான மரபணுக்களைக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

இரட்டைக் குழந்தைகளாம்:

அவரது மரபணுவில் 10 சதவீத மரபணு வேறாக இருந்தது. அப்போது தான் அவர் தனது தாயின் கருவில் இரட்டையராக உருவாகியுள்ளார். ஆனால் கருவிலேயே இரட்டையரில் ஒருவர் உயிரிழந்துவிட அவரது மரபணுவும் தந்தையின் உடலில் சேர்ந்துவிட்டது தெரிய வந்தது.

கைமேரா நிலையாம்:

அந்த மரபணுதான் தற்போது விந்தணுவில் எடுக்கப்பட்டு அந்த விந்தணு மூலமாக குழந்தை பிறந்துள்ளது. இதனை கைமேரா என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A 34-year-old man has just had the shock of his life. After failing his own son's paternity test, doctors found that the man's son carried not his father's DNA, but his long-dead uncle's.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X